யாதகிரி: கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது நண்பர்களால் ஏப்.26ஆம் தேதி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.
கூட்டுப் பாலியல் வன்புணர்வு: யாதகிரி நகரில் உள்ள நிறுவனத்தில் பணியை முடித்துக்கொண்டு ஏப்.26ஆம் தேதியன்று இளம்பெண் ஒருவர் ஆட்டோவில் வீடுதிரும்பினார். அப்போது அந்த ஆட்டோவில், வேறு ஒரு ஆணும் ஏறினார். இந்த நிலையில் ஆட்டோ ஆள் ஆரவாரமற்ற இடத்திற்கு சென்றது. அங்கு அந்தப் பெண்ணை ஆட்டோ டிரைவரும் அவரது நண்பரும் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இதை வீடியோவாக பதிவும் செய்துகொண்டனர். மேலும் இதை வெளியில் கூறினால், வீடியோவை இணையத்தில் பதிவிட்டு, கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.