தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Rise of Covid-19 Cases in WB | நாளை முதல் பள்ளிகள் அடைப்பு; இரவில் ஊரடங்கு

Rise of Covid Cases in WB | மேற்கு வங்கத்தில் நேற்று (ஜனவரி 1) ஒரே நாளில் 4 ஆயிரத்து 512 பேருக்கு கரோனா தொற்று கண்டறிந்த நிலையில், நாளை (ஜனவரி 3) முதல் பள்ளி, கல்லூரிகளை மூட அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

Rise of Covid-19 Cases in WB
Rise of Covid-19 Cases in WB

By

Published : Jan 2, 2022, 5:22 PM IST

Rise of Covid Cases in WB | கொல்கத்தா: நாடு முழுவதும் கரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது.

இதனால், ஹரியானா, டெல்லி, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, மேற்கு வங்கத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றுப் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 512 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 13 ஆயிரத்து 300 பேர், தற்போது கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

மகாராஷ்டிரா, கேரளாவை அடுத்து அதிக கரோனா தொற்றாளர்களை கொண்ட மாநிலமாக மேற்கு வங்கம் உள்ளது. மேலும், இம்மாநிலத்தில் 20 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இரவு நேர ஊரடங்கு

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துவதாக அம்மாநில தலைமைச் செயலர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,"மேற்கு வங்கத்தில் நாளை (ஜனவரி 3) முதல் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், ஸ்பாக்கள், அழகு நிலையங்கள் ஆகியவை முழுமையாக மூட உத்தரவிடப்படுகிறது.

மேலும், அரசு, தனியார் அலுவலகங்களில் 50 விழுக்காடு அலுவலர்களுடன் செயல்படும். உள்ளூர் ரயில்கள் மாலை 7 மணிவரை செயல்படும்.

உணவகங்கள், திரையரங்குகள், மதுபான பார்கள் ஆகியவை 50 விழுக்காடு எண்ணிக்கையுடன் இரவு 10 மணிவரை செயல்படும்.

ஷாப்பிங் மால்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை 50 விழுக்காடு எண்ணிக்கையுடன் செயல்படும். மேலும், இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை முழு ஊரடங்கு அமலாகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Rise of Covid-19 Cases in Delhi | அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கையால் பீதியடைய தேவையில்லை - கெஜ்ரிவால்

ABOUT THE AUTHOR

...view details