கொல்கத்தா:மேற்கு வங்க முன்னாள் தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி பள்ளிப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) ஆசிரியர் பணி நியமனங்களில் ஊழல் செய்ததாகக் கைது செய்யப்பட்டார். முன்னதாக அவரது வீட்டில் அமலாக்கத் துறையினர் தொடர்ந்து 27 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் அவரது வீட்டில் உள்ள அனைத்து ஆவணங்களையும் பரிசோதித்தனர். அதில் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. பார்த்தா சாட்டர்ஜி கொல்கத்தாவின் நியூ மார்க்கெட்டில் இருந்து ஒவ்வொரு மாதமும் ரூ.2.5 லட்சத்திற்கு பழங்கள் வாங்கியுள்ளார். இதற்கான அனைத்து பில்களும் அவரது வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவருக்கு நீரிழிவு நோய் இருப்பது எய்ம்ஸ் மருத்துவமனையின் பரிசோதனையில் தெரிய வந்தது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சாட்டர்ஜி எவ்வாறு ஒரு மாதத்திற்கு அதிகமான பழங்களை சாப்பிட முடியும் என கேள்வி எழுந்துள்ளது.