விஜயநகர்: பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கர்நாடக மாநிலம் விஜயநகரை சேர்ந்த ஆனந்தராஜு என்ற இளைஞரை இந்திய முறைப்படி திருமணம் செய்துள்ளார்.
ஹம்பி ஜனதா பிளாட் பகுதியை சேர்ந்த ரேணுகாம்மா மற்றும் மறைந்த அஞ்சினப்பா ஆகியோரின் மகன் ஆனந்தராஜு. இவர் ஹம்பி பகுதியில் ஆட்டோ டிரைவராகவும், சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாகவும் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த சமூக சேவகரான கெமில் எனும் பெண், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் ஹம்பிக்கு சுற்றுலா வந்திருந்தார். அப்போது ஆனந்தராஜு அவர்களுக்கு உதவி செய்தார். இதற்கிடையில் கெமிலும் ஆனந்தராஜும் நல்ல பழக்கம் ஏற்பட்டு, காதலிக்க தொடங்கியுள்ளனர்.
இதன் பின் இரு வீட்டாரும் பேசி, கெமிலுக்கும் ஆனந்தராஜுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால் இவர்களின் காதல் திருமணத்திற்கு கரோனா தொற்று தடையாக இருந்தது.
மகளின் திருமணத்தை பெல்ஜியத்தில் கோலாகலமாக நடத்த வேண்டும் என்று கெமிலின் பெற்றோர் நினைத்தனர். ஆனால் இந்து முறைப்படி ஹம்பியில் திருமணம் நடக்க வேண்டும் என ஆனந்தராஜுவும் அவரது குடும்பத்தினரும் கூறியதால், கெமிலின் தந்தை ஜீப் பிலிப் இதற்கு சம்மதித்தார். அதன்படி நான்கு வருடங்களாக காதலித்து வந்த இருவருக்கும் இன்று காலை 9.25 மணிக்கு கும்ப லக்னத்தில் திருமணம் ஹம்பி கோயிலில் கோலாகலமாக நடைபெற்றது.
பெல்ஜியம் பெண்ணை கரம் பிடித்த கர்நாடக ஆட்டோ டிரைவர் இதையும் படிங்க:ஒரே மேடையில் 3 ஆயிரம் ஜோடிகளுக்கு டும்.. டும்.. டும்...