தெலங்கானா: காட்டில் வசிக்கும் விலங்குகளை வேட்டையாடி உண்பதால் ஏற்படும் அபாயம் எத்தகைய தீங்கை விளைவிக்கும் என்பது குறித்து கரோனா பெருந்தொற்று உலகளவில் அனைவருக்கும் பாடம் புகட்டியது. அதனாலே விலங்குகளை வேட்டையாடவோ அல்லது அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகளை உண்ண கூடாது என அரசு அறிவித்திருந்த நிலையில் தெலங்கானா மாநிலத்தில் யாசகர்கள் சிலர் கிராமத்தில் சுற்றித்திரிந்த குரங்குகளை வேட்டையாடி சமைத்தது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டம் பைன்சா மண்டலத்தின் சிந்தல் போரி கிராமத்தில் அரங்கேறிய யாசகர்களின் செயல் மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களாக 6 நபர்கள் குழுவாக பைன்சா கிராமத்தில் யாசகம் பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கிராமவாசிகள் யாருக்கும் தெரியாமல், இந்த ஆறு யாசகர்களும் கிராமத்தில் சுற்றித்திரிந்த குரங்குகளில் 4 குரங்குகளை பிடித்து சமைத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில், தகராறு முற்றி கைகலப்பாகியுள்ளது. அதனால் யாசகர் கூட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், யாசகம் பெற்றுவந்த யாசகர்கள் கிராமத்தில் சுற்றித்திரிந்த குரங்களை வேட்டையாடி சமைக்கின்றனர் என்று அப்பகுதி கிராமவாசிகளிடம் தெரிவித்துள்ளார்.