தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வாட்டி வதைக்கும் வெயில்; தெலுங்கானாவில் பீர் விற்பனை அதிகரிப்பு! - தெலுங்கானாவில் பீர் விற்பனை

கோடை வெயில் அதிகரித்துவரும் நிலையில் தெலுங்கானாவில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.

Beer
Beer

By

Published : Apr 13, 2022, 11:20 AM IST

ஹைதராபாத்: அதிகரித்துவரும் வெப்பம் காரணமாக, பீர் விற்பனை அதிகரித்துகாணப்படுகிறது. தெலுங்கானாவில் கடந்தாண்டு மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்.11ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ரூ.3,302.78 கோடி மதிப்பிலான 3.78 கோடி லிட்டர் பீர் மற்றும் 3.56 கோடி லிட்டர் மது விற்பனை செய்யப்பட்டது.

இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் 5.30 கோடி லிட்டர் பீர், 3.58 கோடி லிட்டர் மது என ரூ.3,614.91 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இதில் கடந்த 11 தினங்களாக பீர் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது.

தெலுங்கானாவில் பீர் விற்பனை அதிகரிப்பு

அந்த வகையில் கடந்தாண்டு ஏப்ரல் முதல் 10 நாளில் 84.64 கோடி லிட்டர் பீர் விற்பனை ஆகியிருந்தது. தற்போது அது, 1.11 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த ஆண்டில் 74.4 கோடி லிட்டராக இருந்த மது விற்பனையும் தற்போது 1.39 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது.

பீர் உள்ளிட்ட மது வகைகள் விற்பனை அதிகரித்துவரும் நிலையில் ஒருபுறம், மது குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.

இதையும் படிங்க: பீர் குடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details