டெல்லி : மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அவர் ட்விட்டரில், “பாபு அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளில் அவருக்கு தலை வணங்குகிறேன். அண்ணலின் உன்னத கொள்கைகள் உலகளவில் ஒத்துப்போகக்கூடியவை. அவை லட்சக்கணக்கான மனிதர்களுக்கு வலிமை அளிக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்திடியகள் குஜராத் மாநிலம் போர்பந்தரில் அக்டோபர் 2ஆம் தேதி 1869ஆம் ஆண்டு பிறந்தார். மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி என்ற இயற்பெயர் கொண்ட அண்ணல், அகிம்சை வழியில் நாட்டு மக்களை ஒன்றிணைத்து ஆங்கிலேயர்களிடம் அடிமைபட்டிருந்த இந்திய தேசத்தை மீட்டார்.
இவரின் தலைமையில் நடந்த போராட்டங்களின் விளைவாக நாடு 1947இல் சுதந்திரம் பெற்றது. காந்தியின் பிறந்த தினம் சர்வதேச அளவில் வன்முறைக்கு எதிரான தினமாக கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இவரின் பிறந்தநாளும் உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது.
இதையும் படிங்க : சுதந்திர வரலாற்றை சுமந்து நிற்கும் சேவாகிராம்