இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் ஒவ்வொரு மாதமும் நான்கு ஞாயிறு, இரண்டாவது, நான்காவது சனி என ஆறு நாட்கள் பொதுவாக மூடப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு மாநிலத்தின் பண்டிகை நாட்களை பொறுத்து அறிவிக்கப்படும் அரசு விடுமுறையாலும் வங்கிகள் மூடப்படுகின்றன.
இந்த நிலையில், ஜூலை மாதம் வங்கிகள் மொத்தம் பத்து நாட்களுக்கு மூடப்படும் என இந்திய ரிசர்வ் வங்கியால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். எனவே பொதுமக்கள் அதற்கேற்ப தங்கள் பரிவர்த்தனைகளை திட்டமிட அறிவுறுத்தப்படுகின்றனர்.