தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்க' - கல்லூரி வளாகத்தில் புதிய கட்டுப்பாடு! - கேரளா மாநிலம் செய்திகள் இன்று

கேரள மாநிலத்தில் கோழிக்கோடு என்ஐடி வளாகத்தில், காதலர் தினம் வருவதை ஒட்டி, மாணவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

'உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்க' - கல்லூரி வளாகத்தில் புதிய கட்டுப்பாடு!
'உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்க' - கல்லூரி வளாகத்தில் புதிய கட்டுப்பாடு!

By

Published : Feb 9, 2023, 7:46 PM IST

Updated : Feb 9, 2023, 7:56 PM IST

கோழிக்கோடு: என்ஐடி அதிகாரிகள் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த சுற்றறிக்கை மின்னஞ்சல் மூலம் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. என்ஐடி டீன் முனைவர் ஜி.கே. ரஜினிகாந்த் சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது, 'கல்லூரி வளாகத்தில் எங்கும் அன்பை வெளிப்படுத்தும் உணர்ச்சிகளுடன் கூடிய காட்சிகள் இருக்கக்கூடாது. மற்ற மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் எந்த ஒரு நடத்தையும் இருக்கக்கூடாது.

'உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்க' - கல்லூரி வளாகத்தில் புதிய கட்டுப்பாடு!

மேலும், மாணாக்கர்கள் தங்களின் அன்பை நேசத்தை பொதுவெளியில் வெளிப்படுத்துவது கல்வி சூழலைப் பாதிக்கும். சுற்றறிக்கையை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும்' என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலர் தினம் வருவதை ஒட்டி, இந்த சுற்றறிக்கை ஒரு வாரத்திற்கு முன்பே மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக, மத்திய விலங்குகள் நல வாரியம் காதலர் தினத்தை ‘பசுவை கட்டிப்பிடித்து’ கொண்டாட வேண்டும் என்று வெளியிட்ட சுற்றறிக்கை வைரல் ஆன நிலையில், இந்த அறிக்கையும் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையும் படிங்க:புதுக்கோட்டை சமஸ்தான மாமன்னருக்கு அஞ்சல் தலை வெளியிடுக - அப்துல்லா எம்.பி. கோரிக்கை

Last Updated : Feb 9, 2023, 7:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details