தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்; செயற்கை நுண்ணறிவு மூலம் கண்காணிக்க ஏற்பாடு! - ATS

Ayodhya Ram Temple to be under AI surveillance: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி ஜனவரி 22ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவு (AI) முறை மூலம் கண்காணிக்கும் செயல்முறை அறிமுகபடுத்தப்படுவதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

ayodhya-to-be-under-artificial-intelligence-surveillance-for-ram-temple-consecration-on-jan-22
ராமர் கோயில் கும்பாபிஷேகம்: செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் கண்காணிக்க ஏற்பாடு...

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 5:40 PM IST

லக்னோ (உத்தரப் பிரதேசம்):அயோத்தி ராமர் கோயில் ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேகத்துடன் திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி உள்பட உலக அளவில் பல நாடுகளிலிருந்து பல தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோயில் திறப்பிற்குப் பின் பக்தர்களின் வருகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் உத்தரப் பிரதேச அரசு மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த பாதுகாப்பில், இந்தியாவில் முதன்முறையாக ராமர் கோயிலில் பாதுகாப்பு கண்காணிப்பிற்காக செயற்கை நுண்ணறிவு (AI) அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இது குறித்து மூத்த காவல் துறை அதிகாரி தெரிவிக்கும்போது, "செயற்கை நுண்ணறிவு (AI) கண்காணிப்பின் முதல் திட்டம் அயோத்தி ராமர் கோயிலில் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டம் வெற்றி பெற்றால், செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றப்படலாம்.

மேலும் செயற்கை நுண்ணறிவு (AI) கண்காணிப்பு தவிர 11,000 மாநில காவல் துறை மற்றும் துணை ராணுவப் படைகள் ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், ராமர் கோயில் குறித்த அச்சுறுத்தல் கருத்து அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கை நுண்ணறிவு மூலமாக, கோயிலுக்கு வரும் குழுவினரின் நடமாட்டம் மற்றும் சந்தேகத்திற்குரிய செயல்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து அலாரம் எழுப்பும். இதன் மூலம் பாதுகாப்புப் படை விரைவாக செயல்பட்டு, குற்றச் செயல்கள் மற்றும் அசம்பாவிதத்தைத் தடுக்க முடியும்.

மேலும், ராமர் கோயில் பாதுகாப்புப் பணியில் மட்டும் 26 கம்பெனி துணை ராணுவத்தினர், 8,000 சிவில் காவலர்கள், உத்தரப் பிரதேச பயங்கரவாத தடுப்புப் படை (ATS), சிறப்பு அதிரடிப் படை மற்றும் தேசிய பாதுகாப்புப் படையினர் என மத்திய, மாநில பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

ராமர் கோயில் கும்பாபிஷேக விழா குறித்து உத்தரப் பிரதேச காவல்துறை சமூக வலைதளத்தைக் கண்காணித்து வருவதாகவும், மேலும் பாதுகாப்பு குறித்த கையேடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த காவல் துறையில் சிவப்பு மண்டலம், அதாவது முக்கிய நபர்கள் அமரக்கூடிய இடத்திற்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ராமர் கோயிலைச் சுற்றியுள்ள அனைத்து டாக்ஸி ஓட்டுநர்கள், இ-ரிக்ஷா ஓட்டுநர்கள், ஹோட்டல் ஊழியர்கள், பூசாரிகள், குடியிருப்பாளர்கள் என ஒவ்வொரு தனிநபர் குறித்த விவரங்கள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மேலும் நிகழ்ச்சிக்கு வரும் முக்கிய நபர்கள் அவர்களுடன் பாதுகாப்பிற்கு வரும் பாதுகாப்புப் படை வீரர்களின் விவரங்கள் என அனைத்தும் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின்போது அயோத்தி நோக்கி வரும் வாகனங்கள் எளிதாகச் செல்ல போக்குவரத்து மாற்றம் மற்றும் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அயோத்தி ராமர் கோயிலில் வைக்க தேர்வான கர்நாடக சிற்பி செதுக்கிய ராமர் சிலை!

ABOUT THE AUTHOR

...view details