தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சாலையோர நபர் மீது வேண்டுமென்றே ஆட்டோ ஏற்றிய ஓட்டுநர் - சிசிடிவி வெளியீடு - CCTV Footage of Murder Attempt

சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த நபர் மீது ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வேண்டுமென்றே வாகனத்தை ஏற்றி விபத்து ஏற்படுத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சிசிடிவி வெளியீடு
சிசிடிவி வெளியீடு

By

Published : Jan 12, 2021, 1:54 PM IST

பெங்களூரு:கர்நாடகா மாநிலம் மைசூரிலுள்ள காந்தி நகரில், சாலையோரமாக ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக திரும்பிய ஆட்டோ ஒன்று வேண்டுமென்றே அந்நபர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. அவ்வழியாக வந்த நபரும் படுகாயமடைந்த நபருக்கு உதவு முன்வராத நிலையில், அதே ஆட்டோ ஓட்டுநர் சாலையின் சிறிது தூரம் சென்று வாகனைத்தை யு-டர்ன் எடுத்து, விபத்துக்குள்ளான நபர் மீது மீண்டும் ஆட்டோ ஏற்றியுள்ளார்.

இதில் படுகாயமைடந்த அந்நபர் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் வேண்டுமென்றே விபத்து ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநர் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

சாலை விபத்தின் சிசிடிவி காட்சி

இதையும் படிங்க:எட்டு கோழி முட்டைகளை விழுங்கிய பாம்பு -வைரலாகும் காணொலி!

ABOUT THE AUTHOR

...view details