தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

WEEKLY HOROSCOPE: ஆகஸ்ட் இரண்டாம் வாரத்திற்கான ராசிபலன்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான (ஆகஸ்ட் 7 - 13) வார ராசிபலன்களை காண்போம்.

august second week horoscope  weekly horoscope  horoscope  astrology  astrology prediction  வார ராசிபலன்  ராசிபலன்  ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தின் ராசிபலன்
weekly horoscope

By

Published : Aug 7, 2022, 1:12 PM IST

மேஷம்: உங்களுக்கு பயனுள்ள வாரமாக இது இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையும் எளிமையாக இருக்கும். இருப்பினும், சில புதிய கவலைகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். ஒன்றாக உட்கார்ந்து பேசினால் பிரச்னைகள் தீர்க்கப்படும்.

காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல அனுபவங்கள் நிறைந்த வாரமாகும். வாரத்தொடக்கம் சற்று பலவீனமாக இருக்கலாம். நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படலாம். சில தேவையற்ற பயணங்களால் உங்களுக்கும் சிக்கல் ஏற்படலாம். விரோதிகளிடமிருந்து விலகி இருப்பது உங்களுக்கு நல்லது.

வார நடுப்பகுதியில் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். இதனால் உங்கள் வேலை முடிவடையும். குறைந்த முயற்சியில் அதிக நன்மைகளைப் பெறுவீர்கள்.

வேலை செய்பவர்கள் தங்கள் வேலையில் உற்சாகமாக செயல்படுவார்கள், மேலும் ஆசைகளும் அதிகரிக்கும். எல்லோரும் நீங்கள் சொல்வதைக் கேட்பார்கள், இது உங்களுக்கு வெற்றிக்கான கதவுகளைத் திறக்கக்கூடும்.

இந்த வாரம் வியாபாரத்திற்கு லாபகரமாக இருக்கும். நீங்கள் லாபம் அடைவீர்கள். நீங்கள் உங்கள் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தவும், மன அழுத்தமான வாழ்க்கையிலிருந்து மனநிறைவான வாழ்க்கைக்கு செல்லவும் முடியும்.

மாணவர்களுக்கு நல்ல வாரமிது. அவர்கள் தீவிரமாகப் படிப்பார்கள், அது அவர்களுக்குப் பயனளிக்கும். உங்களுக்கு ஆரோக்கியமான வாரமிது. பெரிய உடல் ரீதியான பிரச்சினை எதுவும் ஏற்படாது. வார நடுப்பகுதி பயணத்திற்கு ஏற்றது.

ரிஷபம்: பொதுவாக உங்களுக்கு இது பயனுள்ள வாரமாகும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். உங்கள் உறவில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையும் அமைதியாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத்துணை உங்களை நன்றாக நடத்தலாம், ஆனால் இடையில் ஏதாவது ஒன்றைப் பற்றி அவர் உங்களிடம் கோபப்படலாம்.

வாரத் தொடக்கத்தில், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப உங்கள் ஆரோக்கியத்தில் ஒரு மாற்றத்தை நீங்கள் உணரலாம். பருவகால பிரச்னைகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். இப்போது உங்கள் தொழிலை பெருக்குவது பற்றி நீங்கள் தீவிரமாக சிந்திப்பீர்கள். இதற்காக, நீங்கள் சில புதிய நபர்களின் உதவியையும் பெறுவீர்கள்.

வேலையில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் நல்லது நடக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். சிலர் விரும்பிய இடத்திற்கு மாற்றப்படலாம்.

மாணவர்கள் மனதில் நன்றாகப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இதன் பலனை அவர்கள் பெறுவார்கள். உங்கள் உடல்நலம் இப்போது நன்றாக இருக்கும். நல்ல உணவை சாப்பிடுங்கள். வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

மிதுனம்: உங்களுக்கு மிதமான பலனளிக்கும் வாரமிது. திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை அன்பால் நிறைந்திருக்கும். காதலிப்பவர்கள் சில பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம். எனவே, நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கலாம். மனக் கவலைகள் உங்களைக் குழப்பத்திலேயே வைத்திருக்கலாம். எவ்வளவு கவலைகள் இருந்தாலும் நீங்கள் உங்கள் எல்லா வேலைகளையும் மகிழ்ச்சியுடன் செய்வீர்கள்.

வாரத் தொடக்கம் நன்றாக இருக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி முதலாளியுடன் மோதல் ஏற்படலாம், எனவே கவனமாக இருங்கள்.

மாணவர்கள் படித்து மகிழ்வார்கள். வாரத் தொடக்கத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வாரக் கடைசி நாட்கள் பயண நோக்கங்களுக்கு நன்றாக இருக்கும்.

கடகம்: உங்களுக்கு மிதமான பலனளிக்கும் வாரமிது. இந்த வாரத் தொடக்கம் காதலிப்பவர்களுக்கு நன்றாக இருக்கும். வார நடுப்பகுதியில் உங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம்.

திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும், ஆனால் உங்கள் நடத்தை காரணமாக சில பிரச்னைகள் எழலாம். இதன் காரணமாக உங்கள் வாழ்க்கைத் துணை சோகமாக இருக்கலாம். அத்தகைய ஒரு நிலைமை எழ அனுமதிக்காதீர்கள்.

வியாபாரத்தில் லாபம் ஈட்டுவீர்கள். நீங்கள் சட்டத்தின்படி செயல்படுவது அவசியமாக இருக்கலாம். தவறு செய்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது ஒரு வழக்கமான வாரமாகவே இருக்கும். பணியிடத்தில் உடன் பணிபுரிபவர் ஒருவருடன் மனஸ்தாபம் ஏற்படலாம், எனவே உங்கள் வேலையை மட்டும் பார்ப்பது நல்லது. அங்கும் இங்கும் யாரிடமும் பேசாதீர்கள்.

வாரத் தொடக்கத்தில் மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். படிப்பு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க உங்கள் நண்பரின் உதவியை நாடுவீர்கள். உங்கள் உடல்நலம் இப்போது நன்றாக இருக்கும். எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருக்கும். வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

சிம்மம்: உங்களுக்கு இது ஒரு நல்ல வாரமாகும். உங்கள் குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் உங்கள் அனுதாபம் அதிகரிக்கும். உங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள். உங்களால் வேலையையும் குடும்பத்தையும் சமநிலைப்படுத்த முடியும்.

காதலிப்பவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் ஒரு சிறிய பதற்றம் இருக்கலாம். எனவே உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசும்போது கொஞ்சம் கவனமாக இருங்கள். பணிபுரிபவர்களுக்கு நல்ல வாரமிது.

வேலை தொடர்பாக நீங்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கலாம். உங்களுக்கு செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரிகள் சட்ட விஷயங்களில் வெற்றி பெறுவார்கள்.

மாணவர்களுக்கும் நல்ல வாரமிது. நீங்கள் படிப்பில் முன்னேற்றம் அடைவீர்கள். உங்களில் பலர் உயர்கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். இது உங்கள் உடல்நிலைக்குத் தீங்கு விளைவிக்கும். வாரத் தொடக்கம் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

கன்னி: உங்களுக்கு இது பயனுள்ள வாரமாகும். காதலிப்பவர்களுக்கு வழக்கமான வாரமிது. உங்கள் உறவில் எளிமை இருந்தாலும் நீங்கள் காதலிப்பவரின் விருப்பங்களை நீங்கள் மதித்து செயல்பட வேண்டும். திருமணமானவர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையில் திருப்தி அடைவீர்கள். வாழ்க்கைத் துணைக்கு நீங்கள் செய்ய விருப்பிய அனைத்தையும் நிறைவேற்றுவீர்கள்.

உங்கள் குடும்பத்திலுள்ள இளையவர்களுடன் சேர்ந்து வேடிக்கையாக இருக்க வாய்ப்புள்ளது. பழைய நண்பர்களுடன் பேசியும் பொழுதைப் போக்குவீர்கள். அது உங்களை மகிழ்ச்சியடையச் செய்யலாம். அதிக நேரத்தை பயணத்திற்கும் செலவிடலாம். வார நடுப்பகுதியில், நீங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து அவர்களின் துக்கங்களையும் மகிழ்ச்சியையும் கேட்டறிவீர்கள். இது உங்கள் மனதில் ஒரு மறுமழர்ச்சியை ஏற்படுத்தும். வாரக் கடைசி நாட்களில், உங்கள்

வேலையில் அதிக கவனம் செலுத்துவீர்கள். இந்த வாரம் நீங்கள் வருமானத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டிய வாரமாகும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள், இதனால் அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் முன்னேற்றத்தை அடைவார்கள். வேலை தொடர்பாக நீங்கள் பல இடங்களுக்கு பயணிக்க வேண்டியிருக்கலாம். செலவுகள் குறையலாம், இருந்தாலும் பணத்தை நிதானமாக செலவு செய்யுங்கள்.

மாணவர்கள் தங்கள் படிப்பிற்காக கடினமாக உழைக்க வேண்டிய தருணமிது. படிப்படியாக படிக்க முயற்சிப்பது உங்களுக்கு நன்மை பயக்கும். உங்கள் உடல்நலம் இப்போது நன்றாக இருக்கும். உணவிலும் குடிக்கும் பானங்களிலும் வழக்கமான தரத்தைப் பராமரிக்கவும். வாரத் தொடக்கம் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

துலாம்: உங்களுக்கு இது ஒரு நல்ல வாரமாகும். நீங்கள் நிறைய நல்ல செய்திகளைக் கேட்கப் பெறுவீர்கள். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். தகவல்தொடர்புகளின் உதவியுடன், நீங்கள் உங்கள் உறவை அழகாக மாற்றலாம். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை பல ஏற்றத் தாழ்வுகளைக் கடந்து செல்லக்கூடும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் மோசமடையலாம். எனவே அவரை கவனித்துக் கொள்ளுங்கள். குடும்பச் சூழல் மேம்படும்.

வீட்டில் உள்ள ஒரு முதியவரின் உடல்நலம் மோசமடையக்கூடும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். தெரியாத மூலங்களிலிருந்தும் பணம் வரலாம். செலவுகள் குறையலாம். இந்த விஷயங்களால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

பணிபுரிபவர்களுக்கு வேலையில் சில பிரச்சினைகள் இருக்கலாம். அலுவலகத்தில் ஒருவருடன் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இருக்க வேண்டும். தொழிபுரிபவர்கள் இப்போது சந்தையில் தங்கள் தேவையை அதிகரிப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கலாம். இது நிறைய வியாபாரத்தை கொடுக்கும். நீங்கள் தகவல்தொடர்பு மற்றும் மார்க்கெட்டிங் நன்மைகளைப் பெறுவீர்கள்.

மாணவர்கள் தங்கள் படிப்பில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். நீங்கள் மனப்பாடமாக படித்து, உங்களால் முடிந்தவரை முயற்சிப்பீர்கள். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்கள் உடல்நலத்தில் பெரிய பிரச்சினைகள் எதுவும் இருக்காது. இந்த வாரம் முழுவதும் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

விருச்சிகம்: உங்களுக்கு இது ஒரு நல்ல வாரமாகும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் ஒரு நீண்ட சுற்றுப்பயணத்தை திட்டமிடலாம். உங்களுக்கு அதிர்ஷ்டம் மேலோங்கி இருக்கிறது, உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவுடன் வேலையில் வெற்றி பெறுவீர்கள்.

காதலிப்பவர்களுக்கும் இந்த வாரம் நன்றாக இருக்கும். நீங்கள் மிகவும் ரொமாண்டிக்காக இருப்பீர்கள், ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வீர்கள். இதனால் உங்கள் உறவு சுமூகமாக இருக்கும்.

நீங்கள் இப்போது மனதளவில் வலுவாக இருப்பீர்கள். எனவே, சில புதிய வேலைகளைச் செய்ய நீங்கள் முன்கூட்டியே முயற்சி செய்வீர்கள். வியாபாரம் படிப்படியாக வளரக்கூடும், இது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடும். நீங்கள் மகிழ்ச்யுடன் இருப்பீர்கள், மேலும் எல்லா வேலைகளையும் புதுப் புத்துணர்ச்சியுடன் செய்ய விரும்புவீர்கள்.

இந்த வாரம் வேலை செய்பவர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். நீங்கள் முழுமனதுடன் உங்கள் வேலையை நேசித்து செய்வீர்கள். அதற்காக நீங்கள் பாராட்டும் பெறுவீர்கள். உங்கள் முதலாளியையும் நீங்கள் கவருவீர்கள். மத சிந்தனைகள் உங்கள் மனதில் தோன்றலாம். வருமானம் சாதாரணமாகவே இருக்கும். நீங்கள் நிச்சயமாக உங்கள் எதிரிகளை வெல்வீர்கள்.

மாணவர்களுக்கு நல்ல வாரமிது. படிப்பில் நல்ல முடிவுகள் கிடைக்கப் பெறுவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். எந்த ஒரு குறிப்பிட்ட பிரச்சனையும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த வாரம் முழுவதும் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

தனுசு: இந்த வாரம் உங்களுக்கு மிதமான பலனளிக்கும் வாரமாகும். வாரத் தொடக்கத்தில், நீங்கள் தொலைதூரப் பயணம் செல்லலாம். நீங்கள் சில நீர்வாழ் இடங்களுக்கு பயணம் செய்ய விரும்பலாம். உங்கள் மனதில் பல சந்தேகங்கள் எழலாம். அவற்றை அழிக்க, உங்களுக்கு வழிகாட்டக்கூடிய ஒரு நபர் உங்களுக்குத் தேவைப்படலாம்.

குடும்ப வாழ்க்கையில் மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் கிடைக்கலாம். வீட்டில் மகிழ்ச்சி இருக்கும். காலிப்பவர்களுக்கு வழக்கமான வாரமிது. திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை கூறும் பல விஷயங்களைப் பின்பற்றுவீர்கள், இதன் காரணமாக வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும்.

இந்த வாரம் வியாபாரிகளுக்கு நல்ல பலன்களைத் தரக்கூடும். உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ப நீங்கள் சீரான முடிவுகளைப் பெறுவீர்கள். இந்த வாரம் வேலை செய்பவர்களுக்கு நல்ல வாரமாகும். ஒரு நல்ல இடத்திற்கு மாறிச்செல்வதற்கான வலுவான வாய்ப்பு இருக்கிறது.

மாணவர்கள் தீவிரமாக படிப்பார்கள். நல்ல பலன்களை அடைவார்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். உங்களுக்கு பயனளிக்கும் உடற்பயிற்சிகளை நீங்கள் செய்யத் தொடங்கலாம். வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

மகரம்:உங்களுக்கு மிகவும் பயனுள்ள வாரமிது. திருமண வாழ்க்கையில் கொஞ்சம் பதற்றம் இருந்தாலும், அன்பும் அர்ப்பணிப்பும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் அசாதாரணமானதாக இருக்கலாம். நீங்கள் காதலிப்பவருடன் திருமணத்தைப் பற்றிப் பேசும் அளவுக்கு பலர் அதிர்ஷ்டசாலிகளாகக் கூட இருக்கலாம். அதில் நீங்கள் வெற்றியும் பெறலாம்.

திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நீங்கள் உங்கள் அனைத்து வேலைகளையும் நன்றாகச் செய்வீர்கள். உங்கள் வருமானம் அதிகரிக்கும்.

சில புதிய முதலீடுகளைச் செய்ய வாய்ப்புள்ளது. வியாபாரம் தொடர்பாக நீங்கள் செய்யக்கூடிய முயற்சிகள் யாவும் பலனளிக்கும். உங்கள் வேலை முடுக்கிவிடப்படலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் பதவி உயர்வுகளைப் பெறுவதன் மூலம் முன்னேறலாம். உங்கள் மனதில் ஆன்மீகப் பயிற்சி நிறைவடையலாம்.

மாணவர்கள் தங்கள் படிப்பில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும். வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

கும்பம்:உங்களுக்கு அசாதாரணமான வாரமிது. குடும்பத்தில் உள்ள இளைய உறுப்பினர் ஒருவர் நோய்வாய்ப்பட்டதால் குடும்பத்தில் சில பதட்டங்கள் ஏற்படலாம். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். உங்களைத் திருமணம் செய்துகொள்ளும்படி உங்கள் காதலி கூறலாம்.

திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கும். பரஸ்பர உரையாடல் இனிமையாக மாறக்கூடும். இது உறவுக்கு இனிமையைக் கொண்டு வரக்கூடும்.

உங்கள் வேலையை தெய்வமாகக் கருதி, அதை உங்கள் முழு மனதுடன் நிறைவேற்றுவீர்கள். இது உங்களுக்கு நல்ல பலன்களைத் தரக்கூடும். உங்கள் மேலதிகாரியும் உங்களுடன் மகிழ்ச்சியாக இருப்பார். எல்லோரும் உங்களைப் பாராட்டுவார்கள்.

இந்த வாரம் வியாபாரிகளுக்கு நல்ல வாரமாகும். உங்கள் தொழில் ஆர்வாலரானவர் உங்களை முன்னணியில் வைத்திருப்பார். இது உங்கள் வேலையை விரைவாகச் செய்ய வைக்கும். இதன் மூலம் நீங்கள் பயனடைவீர்கள். உங்கள் செலவுகள் இப்போதைக்கு குறையும். வருமானம் மேம்படும்.

மாணவர்கள் இப்போது கடினமாக உழைக்க வேண்டியிருக்கலாம். கடினமாக படித்தால் மட்டுமே, நீங்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். உங்கள் உடல்நலம் மேம்படும். இருப்பினும், உணவில் அக்கறை செலுத்துவது நல்லது. வாரத் தொடக்கம் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

மீனம்: உங்களுக்கு பயனுள்ள வாரமிது. திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையை இனிமையாக்க முயற்சி செய்யலாம். இதற்காக, நீங்கள் சில புதிய விஷயங்களைச் செயல்படுத்தலாம்.

காதலிப்பவர்கள் மிகவும் ரொமாண்டிக்காக இருப்பீர்கள். இருப்பினும், காதலிப்பவரின் ஈகோ உங்களுக்கு இடையில் வரலாம். உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும்.

உங்கள் வேலையில் வெற்றி ஆரம்பமாகிறது. அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கிறது. உத்தியோகத்தில் நல்ல பதவி உயர்வு கிடைக்கலாம். உங்கள் பணிச்சுமையும் அதிகரிக்கலாம்.

தொழில் செய்பவர்கள் தங்கள் வேலையை முன்னெடுத்துச் செல்ல சில புதிய வழிகளை முயற்சி செய்வார்கள். உங்கள் தொழில் பார்ட்னரிடமிருந்து உதவிகளையும் நீங்கள் பெறுவீர்கள். உங்கள் இருவரின் கூட்டு முயற்சியால், உங்கள் வியாபாரம் லாபகரமான நிலையில் இருக்கும்.

மாணவர்கள் தங்கள் படிப்பில் சில புதிய பாடங்களைப் படிக்கும் வாய்ப்பைப் பெறலாம். இது அவர்களை மகிழ்ச்சியடையச் செய்ய வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். உங்களுக்கு பெரிய உடல்நலப் பிரச்சனைகள் எதுவும் இருக்காது. இந்த வாரம் முழுவதும் பயணத்திற்கு ஏற்றது.

இதையும் படிங்க: TODAY HOROSCOPE: ஆகஸ்ட் 7 - இன்றைய ராசி பலன்

ABOUT THE AUTHOR

...view details