பிரயாக்ராஜ்: உத்தரபிரதேசத்தில் போலீசார் பாதுகாப்பு வளையத்தில் இருந்த உமேஷ் பால் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக பிரபல ரவுடி அடிக் அகமதுக்கு ஆயுள் தண்டனை வித்தித்து பிரயாக்ராஜ் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வெளியிட்டது. கடந்த 2005ஆம் ஆண்டு பகுஜான் சமாஜ் எம்எல்ஏ ராஜூ பால் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்திக் அகமது மற்றும் அவரது சகோதர் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சிறையில் இருந்து கொண்டே அத்திக் அகமது பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
ராஜூ பால் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த உமேஷ் பாலுக்கு, சிறையில் இருக்கும் அத்திக் அகமதுவால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்பட்டது. முன்னதாக கடந்த 2006 ஆம் ஆண்டு உமேஷ் பாலை, அடிக் அகமதுவின் கும்பல் கடத்தியதாக குற்றச்சாட்டு இருந்தது. இந்நிலையில், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீசார் உமேஷ் பாலுக்கு பாதுகாப்பு அளித்து வந்தனர்.
இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி மர்ம நபர்களால் உமேஷ் பால் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் ஒரு காவலரும் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் சிறையில் இருக்கும் அத்திக் அகமதுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டடது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.