மேஷம்: இன்று,நீங்கள் உங்கள் தோற்றத்தை மேம்படுத்த அதிக முயற்சிகள் செய்யலாம். இன்று உங்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் நாளாக அமைய கூடும். வெளிப்புற தோற்றத்தை வைத்து உறவுகளே அளவிடுவதை தவிர்க்கவும்.
ரிஷபம்: இன்று உங்களுக்கு காதல் உணர்வு அதிகம் இருக்கும். உங்கள் மனதிற்கு பிடித்தவர் பற்றிய எண்ணம் உங்களிடம் ஆக்கிரமித்து, கனவிலும் அவர்கள் ஆக்கிரமிப்பார்கள்.
மிதுனம்:இன்று, வேலைக்கும் குடும்பத்திற்கும் இடையில் உங்கள் நேரத்தை பிரித்து சரியாக கையாள்வீர்கள். உழைப்பில் கவனத்தைத் திருப்பினாலும், குடும்பத்திற்காகவும் நேரத்தை செலவிடுவீர்கள், அதுமட்டுமல்ல, குடும்பத்தினரை வெளியில் அழைத்துச் செல்ல திட்டமிட்டு அவர்களை ஆச்சரியப்படுத்துவீர்கள். உங்களுடைய கனவுகள் நனவாகும் நாள் இது.
கடகம்:உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில், அது உங்கள் அருகில் இருப்பவர்களை காயப்படுத்தும். எழுத்தாளர்கள், உயர் தரமான படைப்பை படைக்கலாம். கலைஞர்களுக்கு உகந்த நாள் இன்று. புதிய சவால்களை எதிர்கொள்ள ஏற்ற நேரம் இது.
சிம்மம்: சில செல்வந்தர்கள் விருந்து உண்டு கொண்டிருக்கும் வேளையில், பெரும்பாலான மக்கள் ரொட்டித்துண்டுக்கே அலைந்து கொண்டிருப்பார்கள். ஏறக்குறைய இதே போன்ற சூழ்நிலையை இன்று நீங்கள் எதிர்கொள்ளலாம். தேவையற்ற செலவுகளை செய்வதற்கு முன்பு அவசியமா இல்லையா என்று சிந்தியுங்கள். எறும்பு தேவைக்காக முன்கூட்டியே சேமித்து வைக்கும் என்ற கதையில் இருந்து சேமிப்பின் அவசியத்தை கற்றுக் கொள்வது அவசியமானது.
கன்னி:உங்கள் காதல் துணை உங்களுக்கு இன்று ஒரு ஆச்சரியத்தை கொடுப்பதோடு, ஒரு கோரிக்கையையும் முன்வைப்பார். தொழிலில் நல்ல செய்திகள் வருவதற்கான வாய்ப்புண்டு. நீங்கள் செய்த பழைய தவறுகளை பகுத்தாய்வு செய்வதன் மூலம், அவற்றை மீண்டும் செய்யாமல் தவிர்க்கலாம். எதிர்காலத்திற்கான திட்டங்களைத் திட்டவும்.
துலாம்: கடந்தகால அனுபவங்களிலிருந்து பிரகாசமான எதிர்காலத்திற்காக நிறைய படிப்பினைகளை கற்றுக் கொள்வீர்கள். உங்களுக்குச் சொந்தமான சில விலையுயர்ந்த பொருட்கள் தொடர்பாக சற்று அதிகமாகவே உரிமை கொண்டாடுவீர்கள். பல்வேறு விஷயங்களைப் பற்றி நாள் முழுவதும் சிறிய அளவிலான கவலைகள் தொடரும். அவற்றால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம்.
விருச்சிகம்: ஆரோக்கியமான உணவு பழக்கங்களைப் பின்பற்றி, உடல்பருமன் ஏற்படுவதைத் தவிர்க்க தொடர்ந்து உடற்பயிற்சி செய்யவும். ஒழுங்கற்ற உணவு பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள், சந்தோஷமாக இருங்கள்
தனுசு: இன்று உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்துக் கொள்ளும் நடுநிலையாளராக மாறுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்களை கண்டறிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். காரணங்களை கண்டுபிடிப்பதற்கு ஓரளவு கால அவகாசம் எடுத்துக் கொண்டாலும், இறுதியில் நீங்கள் விரும்பியதைச் சாதிக்கவும், அதற்கு நியாயமான தீர்வையும் கண்டுபிடிக்க முயற்சிக்கவும்.
மகரம்:உங்களுக்கு ஒப்படைக்கப்பட வேலையின் அளவு அதிகமாக இருப்பதால் நாள் முழுக்க நிற்கவே நேரம் இருக்காது. அது உங்கள் உற்சாகத்தை குறைக்கச் செய்யும். பிற்பகலில் நீங்கள் சோர்வடைந்து விடுவீர்கள். அறிவுபூர்வமாக சிந்தித்து, கவனமாக செயல்பட்டால், வெற்றி நிச்சயம்.
கும்பம்: சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் பரப்ப விரும்பும் உங்களுக்கு இன்று அந்த முயற்சியில் வெற்றி கிட்டும். எனினும், பிரச்சினைகளை தீர்ப்பதற்காக, உங்களுடைய சொந்த முன்னுரிமைகள் மற்றும் நலன்களை தியாகம் செய்ய வேண்டும். ஒரு சமாதான செயலராக செயல்படுவது நல்ல விஷயம் என்றாலும், பிறர் அதை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்வார்கள்.
மீனம்:உங்கள் சொந்த வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும், செய்ய வேண்டிய மாற்றங்களை தீவிரமாக சிந்தித்து செயலாற்றுங்கள். இதுபோன்ற விஷயங்களில் தற்போதுகூட உங்கள் மனதின் குரலையே நீங்கள் கேட்கிறீர்கள். இருப்பினும், இது உங்களுக்கு ஒரு பொற்காலமாக இருப்பதால் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
இதையும் படிங்க:TODAY HOROSCOPE: நவ.04 - இன்றைய ராசிபலன்