தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

TODAY HOROSCOPE: நவ.04 - இன்றைய ராசிபலன் - Todays Rasi Palan

TODAY HOROSCOPE: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்ப்போம்.

இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன்

By

Published : Nov 4, 2022, 6:30 AM IST

மேஷம்:இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாள். யாருடைய உதவியோ, செல்வாக்கோ அல்லது பரிந்துரையோ இல்லாமல், உங்கள் தனிப்பட்ட திறமையால் முக்கிய காரியங்களை செய்து முடிப்பீர்கள். நீங்கள் அறிவியல் அல்லது கலை ஆர்வம் மிக்க மாணவராக இருந்தால், உங்கள் ஆழ்ந்த அறிவினால் எதிர்பார்ப்புகளையும் தாண்டி அபார வெற்றி பெறலாம்.

ரிஷபம்:இன்று, மற்றவர்களை ஈர்ப்பதோ கட்டுப்படுத்துவதோ உங்களுக்கு சிரமமாக இருக்கலாம். ஏதோ ஒன்றைப் பெற வேண்டும் என்று உங்கள் மனதில் இலக்கு வைத்திருந்தால், அதில் தொடக்கத்தில் பின்னடைவுகளை எதிர்கொள்ள நேரிடும், ஆனால் இறுதியில், நீங்கள் அதை பெறுவதில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் ஈடுபடும் அனைத்து செயல்களும் நல்ல பலனளிக்கும்.

மிதுனம்: மதம், சமூக மற்றும் கல்வி நலன்கள் இன்று நாள் முழுவதும் உங்களை ஆக்கிரமித்திருக்கும். அறக்கட்டளை அல்லது தொண்டு நிறுவனங்களுக்காக பணத்தை செலவிடுவீர்கள். வணிக ஒப்பந்தங்களை மேற்கொள்ள உகந்த நேரம் இது.

கடகம்:ஒழுங்கற்ற முறையில் சில பொதுவான சூழ்நிலைகளை சமாளிக்க உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். மாலையில் பிறரிடம் இருந்து பொது உளவியல் தொடர்பான சில பாடங்களை கற்றுக்கொள்வீர்கள். எந்தவொரு முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன்னர், பாரபட்சமற்று நடுநிலைமையில் இருந்து நன்மை தீமைகளை மதிப்பிடுவது அவசியம்.

சிம்மம்: அடிக்கடி உங்கள் மனக்கட்டுப்பாட்டை இழக்காதீர்கள். இன்று மனதில் பல்வேறு விதமான எண்ணங்கள் அலைமோதும். குறிப்பாக காலையில், எரிச்சலூட்டும் சம்பவங்கள் நடைபெறும். இன்று டன் கணக்கான பிரச்சனைகளை நிர்வகிக்க வேண்டியிருக்கும். இது உங்கள் அழுத்தத்தை அதிகரிக்கும்.

கன்னி:சிறிய விஷயங்களுக்காக விரக்தியடைய வேண்டாம். இல்லையெனில், உங்கள் உறவுகளில் பாதிப்பு ஏற்படும். சட்ட விஷயங்களில் நீதிமன்றத்துக்கு வெளியிலேயே சமரச முடிவு ஏற்படும். மாலையில், உங்கள் மகிழ்ச்சிக்காக ஓரளவு பணத்தை செலவழிக்கலாம்.

துலாம்:சலிப்பூட்டும் அன்றாட வாழ்க்கையிலிருந்து சற்று விலகிச் சென்று விடுமுறையை அனுபவியுங்கள். இந்த பயணத்தினால் உங்களுக்கு புத்துணர்வு ஏற்படுவதோடு, அறிவும் அனுபவமும் அதிகரிக்கும்.

விருச்சிகம்: அவ்வப்போது வாழ்க்கையின் ஆடம்பரங்களை அனுபவித்து மகிழ்வதும் நல்லதே. வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து இருந்தால், அது காதல் நிறைந்த சுக அனுபவமாக இருக்கும். பணியிடத்தில் பிறர் உங்களை நிறுவனத்தின் சொத்தாக நினைத்து மதிப்பார்கள்.

தனுசு: இன்று உங்கள் எதிர்ப்பார்ப்புக்கு அதிகமாகவே நற்பலன்கள் நடைபெறும். பிறருடைய பங்களிப்புக்காக அவர்களை பாராட்டுவதற்கு ஒரு நொடி கூட தயங்க மாட்டீர்கள். உங்களுக்கு மிகவும் பிரியமானவர்களை அன்புடன் அரவணைத்து செல்வீர்கள்.

மகரம்: நேர்மறையான அணுகுமுறை, விடாமுயற்சி, நேர மேலாண்மை, வலுவான மற்றும் ஆதரவான நல்வாழ்த்துக்கள் என வெற்றிகரமான வாழ்க்கைக்கான அனைத்து காரணிகளும் உங்களுக்கு ஆதரவாக இருக்கின்றன. இருந்தாலும், அதை எளிதாக எடுத்து கொள்ள வேண்டாம். குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிப்பது அன்பானவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

கும்பம்: நீங்கள் அடிக்கடி கற்பனை உலகத்திற்கு சென்று விடுவதால், நிதர்சனத்தை மறந்துவிடுகிறீர்கள். நிறைவேறவே வாய்ப்பில்லாத விருப்பங்களை உதறித் தள்ளுங்கள். இல்லையென்றால், யதார்த்தத்தை எதிர்கொள்ளும்போது, ஏமாற்றமே மிஞ்சும். மகிழ்ச்சியாக இருங்கள். உங்களிடம் இருப்பதைக் கொண்டு திருப்தியடையுங்கள். சக ஊழியர்களின் உதவியால், உங்கள் பணியை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

மீனம்:நாள் முழுவதும் சிறிய அளவிலான கருத்து மோதல்கள் ஏற்படும். முரண்பாடுகள் முடிந்த பிறகு கூட, அதிலிருந்து நீங்கள் வெளியே வர காலம் எடுக்கும். வேலையில் முன்னேற்றத்தை விரும்பினால் உங்கள் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இதையும் படிங்க:தீபாவளி நாளில் உங்கள் ராசிக்கான பலன்கள் எப்படி..?

ABOUT THE AUTHOR

...view details