தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

TODAY HOROSCOPE: நவ.18 - இன்றைய ராசிபலன் - TODAY HOROSCOPE

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்ப்போம்.

இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன்

By

Published : Nov 18, 2022, 6:56 AM IST

மேஷம்:குழந்தைகள் உங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அவர்களின் எதிர்காலத்தை நினைத்து, நீங்கள் இத்தனை நாள் உழைத்து வந்தீர்கள். நெடு நாட்களாக முடிக்காமல் இருந்த பணிகளை, நிறைவு செய்வீர்கள், மருத்துவத்துறை மற்றும் பொதுத் துறையில் இருப்பவர்களுக்கு இன்று சிறந்த நாளாக இருக்கும்.

ரிஷபம்:இன்றைய தினத்தைப் பொருத்தவரை, ஒரு ஆக்கபூர்வமான போட்டி நிறைந்த நாளாக இருக்கும். உங்களது செயல் திறன் மூலமாக உங்களுடன் பணிபுரிபவர்களையும், மேல் அதிகாரிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். அவர்கள் உங்களுக்கு உதவி செய்ய ஆர்வமாக இருப்பார்கள். நீங்கள் மேற்கொள்ள உள்ள பணியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

மிதுனம்:இன்றைய தினத்தைப் பொருத்தவரை, சில குறிப்பிட்ட நபர்களுடன், உங்களது உறவு உணர்வு பூர்வமானதாக இருக்கும். இதனால் நீங்கள், மகிழ்ச்சி அடைவீர்கள். நாளின் பிற்பகுதியில் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களை எதிர்நோக்க நேரிடும். எனினும், பதற்றம் அடையாமல் நிதானமாக கையாண்டால், அதில் இருந்து தப்பிக்கலாம்.

கடகம்:இன்று, பணியை பொறுத்தவரை மிகவும் சாதகமான நாளாக இருக்காது. வேலையில் மனம் லயிக்காமல், குழப்பமான மனநிலை இருக்கும். குழந்தைகள் பிரிவால், தனிமையாக உணர்வீர்கள்.

சிம்மம்:இன்று நீங்கள் அனைத்து முடிவுகளையும் நன்றாக சிந்தித்து விரைவாக மேற்கொள்வீர்கள். இன்று நீங்கள் உற்சாகமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள். வழக்கமான பணி தான் என்றாலும், கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்றுவது நல்லது. சிலருடன் விவாதத்தில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது. கவனத்துடன் செயல்படவும்.

கன்னி:குடும்பம் தொடர்பான விஷயங்களில், நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் பேச்சு திறன் மற்றும் அறிவாற்றல் காரணமாக சச்சரவுகளை தீர்த்து விடுவீர்கள். பொறுமையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அனைத்தையும் அமைதியாக அணுகுவீர்கள்.

துலாம்: இன்று உங்கள் குடும்பத்துடன் நேரம் செலவிடுவீர்கள். அவர்களுடன் சிறிய பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு. இன்று குதூகலமான நாளாக இருக்கும். மன அமைதிக்காக நீங்கள் கோவில்களுக்கும், ஆன்மீக இடங்களுக்கும் செல்லும் வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, நீங்கள் மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் பரப்பும் ஒரு கருவியாக இருப்பீர்கள். அனைத்து மக்களின் அன்பைப் பெறுவீர்கள். உங்களை சிலர் போட்டியாக நினைக்கலாம். உங்களைப் பார்த்து சிரிக்கும் உலகை, நீங்கள் பார்த்து சிரிக்கலாம். மகிழ்ச்சியை பரப்பினால், அது பத்து மடங்காக உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.

தனுசு:குறிக்கோளை நோக்கிய உங்களது பயணம் வெற்றி பெறும். உங்களது உறுதியான மனப்பான்மை, உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். எனினும் உங்கள் பாதையில் சவால்களை எதிர்கொள்ளும் வாய்ப்புண்டு.

மகரம்:உடல் நலத்தின் மீது நீங்கள் கவனம் செலுத்தி வந்ததால், அது உங்களுக்கு உதவியாக இருக்கும். நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதில், கால தாமதம் ஏற்படலாம். ஆனால் அனைத்தையும், நிறைவு செய்து விடுவீர்கள். காலதாமதம் காரணமாக, மேலதிகாரி உங்கள் மீது வருத்தம் கொள்ளலாம். உங்களுக்கு நிதி நிலைமை இன்று நன்றாகவே இருக்கும்.

கும்பம்:இன்றைய தினத்தைப் பொருத்தவரை, மனதுக்கு பிடித்தவர்களுடன் நேரத்தை செலவழித்து, அவர்களுடன் கடைகளுக்கு செல்வீர்கள் அல்லது சுற்றுலா செல்வீர்கள். கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால், குடும்பத்தினருடன் குதூகலமாக நேரத்தை செலவழிப்பீர்கள்.

மீனம்:இன்று, நீங்கள் மக்களின் தேவையையும் உணர்வுகளையும் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். அதனால் அவர்களது ஆசி உங்களுக்கு கிடைக்கும். உங்களது மேலதிகாரிகள், சக பணியாளர்கள், வாழ்க்கைத் துணை மற்றும் சகோதரர்கள் என அனைவரையும் திருப்திப்படுத்துவீர்கள். உங்களது சிறந்த தன்மைகளை நீங்கள் இழக்காமல் இருக்க வேண்டும்.

இதையும் படிங்க:HOROSCOPE TODAY: நவம்பர் 17 ராசிபலன்!

ABOUT THE AUTHOR

...view details