தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

TODAY HOROSCOPE ஆகஸ்ட் 23 இன்றைய ராசிபலன் - today astrology

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை காணலாம்.

ஆகஸ்ட் 23 இன்றைய ராசிபலன்
ஆகஸ்ட் 23 இன்றைய ராசிபலன்

By

Published : Aug 23, 2022, 6:41 AM IST

மேஷம்: இன்றைய தினத்தை பொறுத்தவரை, ஒரு சாதகமான நாளாகவே இருக்கும். உங்களிடம் இருப்பவைகளை பற்றி நினைத்து நீங்கள் திருப்தியாக இருப்பீர்கள். அது தவிர, நீங்கள் செய்ய விரும்பும் ஒரு விஷயத்திற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பீர்கள். காதல் உறவுடன் செலவிடும் நேரம் மகிழ்ச்சியை கொடுத்தாலும், அது சச்சரவுகளை ஏற்படுத்தலாம். அது குறித்து நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.

ரிஷபம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, நீங்கள் வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு, குதூகலமாகவும் அமைதியாகவும் நேரம் செலவழிக்கும் வாய்ப்பு உள்ளது. மாலைப் பொழுதில், நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் குதூகலமாக நேரத்தை கழிக்கலாம். அல்லது இரவு உணவிற்காகவோ அல்லது திரைப்படம் பார்க்கவோ குடும்பத்தினருடன் செல்லக்கூடும். சூடான, மசாலா நிறைந்த சுவையான உணவை சாப்பிடும் ஆர்வம் அதிகம் இருக்கும். இன்றைய பொழுதை குதூகலமாக நீங்கள் கழிக்கலாம்.

மிதுனம்: இன்று முழுவதும், உங்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும். உங்கள் ஆற்றலையும் ஆர்வத்தையும் எப்படி சிறப்பாக பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து நீங்கள் யோசிப்பீர்கள். மன நிலையிலும் பெரும் மாற்றங்கள் இருக்கும், தியான பயிற்சிகள் மூலம் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளலாம்.

கடகம்: இன்று நீங்கள் புதிய உணவு வகைகளை தயாரிப்பீர்கள். அதனை குடும்ப உறுப்பினர்கள், மிகவும் விரும்பி சாப்பிட்டு மகிழ்வார்கள். பழைய நினைவுகளில் நீங்கள் மூழ்கக் கூடும். விருந்தினரின் வருகையால், சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

சிம்மம்: உங்களுக்கு இருக்கும் அதிக தன்னம்பிக்கையின் காரணமாக, சிக்கலான விஷயங்களை தைரியமாக மேற்கொள்வீர்கள். விளையாட்டு வீரர்கள் தங்கள் துறையில், மேம்பாடு அடைவார்கள். முழு திறமையை பயன்படுத்தி, உங்களுக்கு ஏற்படும் தடைகளை நீக்குவீர்கள். இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான நாள் தான் என்றாலும், உங்கள் அனுமானங்களை கட்டுப்படுத்தவும்.

கன்னி: உங்களுக்காக, தனிப்பட்ட முறையில் நேரம் எடுத்துக்கொண்டு ஓய்வெடுப்பது முக்கியம். பணியிடத்தில், மூத்த அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். பொறுமையை கடைப்பிடித்து, கடினமான சூழ்நிலைகளை கையாளவும். காதல் வாழ்க்கையில் புதிய திருப்பம் ஏற்படக் கூடும்.

துலாம்: நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருந்த சட்டப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இது நீதிமன்றம் மூலமாகவோ அல்லது பரஸ்பர புரிந்துணர்வு காரணமாகவோ இருக்கலாம். வேலைப்பளுவை பொருத்தவரை எப்பொழுதும் போல் இருக்கும். பிரச்சனையான சூழ்நிலைகளில் இருந்து தப்பிக்க, சிறந்த வகையில் திட்டம் தீட்ட உங்களுக்கு நேரம் கிடைக்கும்.

விருச்சிகம்: இன்று நீங்கள், விதிமுறைகளின் படி சரியாக செயல்படுவீர்கள். பணியிடத்திற்கு, முதலில் சென்று, நெறிமுறைகளை சரியாக கடைபிடித்து, மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக திகழ்வீர்கள்.

தனுசு: உங்களது காதல் வாழ்க்கை இனிமையாக தொடரும். கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், நீங்கள் காதல் வயப்பட்டு, ஒரு அழகான நபராக இருக்கும் வண்ணம் செயல்படுவீர்கள். எனினும், காதல் வாழ்க்கையை தொடங்கும் முன், சிந்தித்து செயல்படவும்.

மகரம்: காதலர் மூலம், இன்ப அதிர்ச்சிகள் ஏற்படும். உங்கள் காதல் துணை மீதான காதல் காரணமாக, அவரது ஆசைகளைப் பூர்த்தி செய்வீர்கள். இருவரும் கடைகளுக்கு சென்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அதன் காரணமாக அதிக செலவுகள் ஏற்படலாம். உங்கள் காதலியின் விருப்பத்தை நிறைவேற்றி அவரை மகிழ்ச்சியடைய செய்வீர்கள். ஆனால் நாளின் இறுதியில், அதிக செலவின் காரணமாக, சிறிது மனம் வருந்துவீர்கள்.

கும்பம்: இன்று நீங்கள் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் பயணத்தை தனியாக மேற்கொள்வது நல்லது. மற்றவர்களை உங்களுடன் அழைத்துச் சென்றால், அவர்களது விருப்பமும் உங்களது விருப்பமும் வெவ்வேறாக இருந்து பயணம் மகிழ்ச்சி இல்லாமல் போகக் கூடும். எனினும், அது போன்ற சூழ்நிலை ஏற்பட்டால், சமரசம் செய்துகொண்டு, மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யவும். உங்களது பலவீனத்தை பலமாக மாற்றிக் கொள்ளும் உங்கள் திறமை, உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

மீனம்: அலட்சியமான போக்கு, வீழ்ச்சிக்கான முக்கிய காரணமாக உள்ளது. இன்றைய தினத்தில், நீங்கள் பணியிடத்தில் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலையும் பொறுப்புணர்ச்சியுடன் கவனமாக மேற்கொள்ளவும். எச்சரிக்கையுடன் செயல்பட்டால், வரப்போகும் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நெடுநாட்களாக, நிறைவேற்றப்படாமல் இருக்கும் திட்டங்கள் மற்றும் பிற செயல்களை நீங்கள் நிறைவேற்றுவீர்கள். அதற்கான பலன்களும் கிடைக்கத் தொடங்கும்.

இதையும் படிங்க: WEEKLY HOROSCOPE: ஆகஸ்ட் மூன்றாம் வாரத்திற்கான ராசிபலன்...

ABOUT THE AUTHOR

...view details