தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

TODAY HOROSCOPE: மே 21 - இன்றைய ராசிபலன் - மேஷம்

TODAY HOROSCOPE: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்போம்.

TODAY HOROSCOPE: மே 21 - இன்றைய ராசிபலன்
TODAY HOROSCOPE: மே 21 - இன்றைய ராசிபலன்

By

Published : May 21, 2022, 6:58 AM IST

மேஷம் :சமூகப் பொறுப்புகள் மற்றும் அலுவலக பணியின் காரணமாக உங்களுக்கு வேலை அதிகம் இருக்கும். இதிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு உங்களுக்கான நேரத்தை செலவழிக்க வேண்டும். உங்களது உடல் நலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. உங்கள் உடல் நலன் பாதிக்கப்பட்டால், அனைத்து பணிகளும் பாதிக்கப்படும்.

ரிஷபம் :இன்றைய தினத்தில், நீங்கள் பலவிதமான புதிர்களுக்கான பதிலை தேடுவீர்கள். மற்றவர்கள் செய்த தவறுக்காக நீங்கள் பொறுப்பு ஏற்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இதனால் ஏமாற்றம் மற்றும் வருத்தம் காரணமாக தன்னம்பிக்கை குறையும். உங்களது பலம் என்ன என்பதையும் பலவீனம் என்ன என்பதையும் அறிந்து கொண்டு செயல்படவும்.

மிதுனம் :இன்று, நீங்கள் மற்றவர்களின் திறமையை பாராட்டி ஊக்குவிப்பதில் நேரத்தை செலவிடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் பாதுகாப்பு மற்றும் நிதி நிலைமை தொடர்பான விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்வீர்கள். அன்பினால் இணைக்கப்பட்ட உறவுகள் நீண்ட காலத்திற்கு வலுவானதாக இருக்கும்.

கடகம் :நெருக்கமான நண்பர்கள், உங்கள் மனப்பான்மையைக் கண்டு பெருமை கொள்வார்கள். அவர்களுடன் நேரத்தை கழித்து, அவர்களை சந்தோஷப்படுத்துவீர்கள். நண்பர்களுடன் கொண்டுள்ள நெருக்கமான உறவுகள் நீண்ட காலத்திற்கு, நீடித்து இருக்கும்.

சிம்மம் :வானிலை மாற்றம் போல உங்கள் மனநிலை மாறிக் கொண்டே இருக்கும். சில சமயம் மகிழ்ச்சியாகவும், சில சமயங்களில் சோகமாகவும் இருக்கும். எனினும் அமைதியும் நிம்மதியும் ஏற்படும். உங்கள் பணியை தொடர்ந்து மேற்கொண்டு சந்தோஷமாக இருக்கவும்.

கன்னி :உங்களது மனதில் பல்வேறு அறிவார்ந்த எண்ணங்கள் உதித்துக் கொண்டே இருக்கும். உங்களது அற்புதமான செயல் ஆற்றல் மூலம், அனைத்தையும் சரி செய்து விடுவீர்கள். மற்றவர்கள் மனதைப் படித்து, உங்கள் அன்புக்குரியவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள்.

துலாம் :இன்றும் எங்கள் காதல் வயப்படும் வாய்ப்பு உள்ளது. உங்கள் கண்களையும் காதுகளையும் கூர்மையாக்கிக் கொண்டு, நீங்கள் சந்திக்கும் காதலரை வரவேற்கத் தயாராக இருங்கள். எனினும் இந்த காதலுக்காக நீங்கள் அதிக செலவு செய்ய வேண்டி இருக்கும்.

விருச்சிகம் :மனதிலிருந்து எதிர்மறையான எண்ணங்களை நீக்கவும். நீங்கள் உங்கள் குழு உறுப்பினர்களுடன் திறமையாக பணியாற்றி, அவர்களுக்கு பணிகளை சிறந்த முறையில் பங்கீட்டு வழங்குவீர்கள். அவர்களது திறன்களை புரிந்துகொண்டு அதற்கு ஏற்ற வகையில் பணிகளை ஒதுக்குவீர்கள்.

தனுசு :இன்று நீங்கள் மந்தமாக உணர்வீர்கள். எனினும், மாலையில் கவலை மேகங்கள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். உங்கள் பணியை தொடர்ந்து மேற்கொண்டு சந்தோஷமாக இருக்கவும். வெளி நாடு அல்லது நண்பர்களிடம் இருந்து வரும் நல்ல செய்தி மகிழ்ச்சியை கொடுக்கும்.

மகரம் :நீங்கள், இன்று நியாயமான மற்றும் அநியாயமான முறையில் குறிக்கோளை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். அறிவார்ந்த வளர்ச்சி ஒப்பற்ற தாக இருக்கும். உங்கள் நோக்கமும் சரியாகவே இருக்கும். உங்கள் உறுதிப்பாடு காரணமாக, முடிவுகளை திறமையாக எடுப்பீர்கள்.

கும்பம் :உங்கள் தொடர்பு திறன் இன்று அதிசயங்களை உண்டாக்கும். உங்களுடைய பேச்சாற்றல் மூலம் மக்களை கவர்வீர்கள். கூட்டங்களில் பங்கேற்கும் போது, இந்த திறன் மிகவும் பயன்மிக்கதாக இருக்கலாம். உண்மையில், உங்கள் அனைத்து வாதங்களும் மிகவும் இணக்கமானதாக இருக்கும். மக்கள் உங்களுடன் ஒத்துப் போகாமல் இருக்கும் போது, ​​அவர்களை நிர்பந்திக்காமல் இருப்பது தான் உங்கள் உத்தியாகும்.

மீனம் : அலுவலகம் மற்றும் வீடு ஆகிய இரண்டிலும், நீங்கள் பொறுப்புகளையும் பணிகளையும் கையாள்வீர்கள். வீட்டை அலங்கரிக்கும் பணியில் முழு மனதுடன் ஈடுபடுவீர்கள். செலவுகள் சிறிது அதிகரிக்கலாம். கடுமையான உங்களது முயற்சிக்கு அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும்.

இதையும் படிங்க:Weekly Horoscope: மே 3 வது வாரத்திற்கான ராசிபலன்

ABOUT THE AUTHOR

...view details