மேஷம்:உங்கள் குழந்தைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வாய்ப்பு அதிகம் உள்ளது. முடிக்கப்படாமல் உள்ள பணிகளை நீங்கள் நிறைவுசெய்வீர்கள். மருத்துவத்துறை மற்றும் பொதுசேவையில் இருப்பவர்களுக்கு, இன்று மிகவும் சாதகமான நாளாக இருக்கும்.
ரிஷபம்:இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, ஒரு ஆக்கப்பூர்வமான போட்டி நிறைந்த நாளாக இருக்கும். உங்களது செயல் திறன் மூலமாக உங்களுடன் பணிபுரிபவர்களையும், மேல் அலுவலர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். அவர்கள் உங்களுக்கு உதவி செய்ய ஆர்வமாக இருப்பார்கள். நீங்கள் மேற்கொள்ள உள்ள பணியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
மிதுனம்:இன்று, உங்கள் மனதுக்குப் பிடித்தவர்களுடன், ஒரு உணர்வுப்பூர்வமான உறவு இருக்கும். இன்று பெரும்பாலான நேரத்தில் நீங்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பீர்கள். உங்களது உற்சாகத்தை குறைக்கும் சில விஷயங்கள் ஏற்படக்கூடும். ஆனாலும், புன்னகையுடன் எதிர்கொண்டால், அனைத்துப் பிரச்னைகளும் தீர்க்கப்பட்டுவிடும்.
கடகம்:இன்று உங்களுக்குச் சாதகமான நாளாக இருக்கும். பெரிய இழப்புகள் எதுவும் இல்லை என்றாலும், நீங்கள் குழப்பமான மனநிலையில், சிறிது தனிமையில் நேரத்தைச் செலவிடுவீர்கள். குழந்தைகள் பிரிவின் காரணமாக, நீங்கள் உணர்வுரீதியாக பாதிக்கப்படக்கூடும்.
சிம்மம்:உங்களது குழப்பமில்லாத முடிவுகள் காரணமாக, எதிர்பார்த்த பலன்களை அடைவீர்கள். உடல்நிலை நன்றாக இருக்கும். பணியிடத்தில் நீங்கள் வேலையில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள். தேவையில்லாத சச்சரவுகள் ஏற்படும் என்பதால், உறவுகளைப் பராமரிக்கும்போது கவனமாக இருக்கவும். தேவையில்லாத சச்சரவுகள் ஏற்பட்டு, உறவுகள் சிறிது பாதிக்கக்கூடும்.
கன்னி:இன்று நீங்கள் குடும்பத்தினரின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வீர்கள். உங்களது சிறந்த பேச்சு திறன் காரணமாக, சச்சரவுகள் அனைத்தும் எளிதாக தீர்க்கப்பட்டுவிடும். உங்களது அமைதியான பொறுமையான நடைமுறை, வாழ்க்கையை எளிதாக்கி, உங்களுக்குப் பல பாடங்களைக் கற்றுத்தரும்.
துலாம்:நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன், சந்தோஷமாக நேரத்தை கழிப்பீர்கள். குடும்பத்தினருடன் சிறிய சுற்றுலா செல்லும் வாய்ப்பு உண்டு. நீங்கள் கோயில் அல்லது ஆன்மிக இடங்களுக்குச்சென்று, உங்கள் எண்ணத்தை மேம்படுத்திக்கொள்வீர்கள்.
விருச்சிகம்:இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, நீங்கள் மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் பரப்பும் ஒரு கருவியாக இருப்பீர்கள். அனைத்து மக்களின் அன்பைப்பெறுவீர்கள். உங்களை சிலர் போட்டியாக நினைக்கலாம். உங்களைப் பார்த்து சிரிக்கும் உலகை, நீங்கள் பார்த்து சிரிக்கலாம். மகிழ்ச்சியைப் பரப்பினால், அது பத்து மடங்காக உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும்.
தனுசு:நீங்கள், பலவகையான பணிகளை கையாளும் திறன் பெற்றவராக இருப்பீர்கள். சிறிது சவால்களை சந்தித்தாலும், உங்களது நம்பிக்கை மற்றும் செயல்திறன் காரணமாக அனைத்திலும் வெற்றிபெறுவீர்கள். இன்று உங்களுக்குச் சுமுகமான நாளாகவே இருக்கும். சம்பங்களை சந்திக்காத வாழ்க்கை சுவாரசியமாக இருக்காது அல்லவா?
மகரம்:இன்று உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். முடிக்கப்படாமல் இருக்கும் பணிகளை முடிப்பதில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும், அது முடியாத காரியமாக இருக்காது. நீங்கள் விட்ட காலநேரத்தில் பணியை நிறைவு செய்யாததால், மேல் அலுவலர் அதிர்ச்சி அடையக்கூடும். நிதி தொடர்பான விஷயங்களை நீங்கள் ஒத்திபோட விரும்ப மாட்டீர்கள்.
கும்பம்:நீங்கள் உங்கள் குடும்பத்தினரை மிகவும் விரும்புபவர் என்பதால், அவர்களுடன் வீட்டில் நேரம் செலவுசெய்ய சரியான நேரம் இதுவாகும். அவர்களுடன் கடைகளுக்குச் சென்று அல்லது சுற்றுலா சென்று, அவர்களுக்கு வேண்டியதை வாங்கிக்கொடுத்து சந்தோஷப்படுத்தவும்.
மீனம்:இன்று நீங்கள் மக்களிடம் அனுதாப மனப்பான்மையுடன் நடந்து கொள்வீர்கள். இதனால் சிலரின் ஆசிகளைப் பெறுவீர்கள். நீங்கள் நல்ல மேல் அலுவலர்களாக, நல்ல சக பணியாளராக, கணவனாக அல்லது மனைவியாக மற்றும் நல்ல மகன் அல்லது மகளாக உங்களை நிரூபிப்பீர்கள். இந்த நல்ல தன்மையை நீங்கள் கை விடாமல் இருக்க வேண்டும்.
இதையும் படிங்க:New Year 2022 Horoscope: இந்த வருடம் உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ!