முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் இன்று(மே.21) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களில் அவரது உருவப்படங்கள், உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில், அவரது மகனும், எம்பியுமான ராகுல் காந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதேபோல் பல்வேறு தலைவர்களும் ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தினர்.