தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜெயமாலா உட்பட 8 யானைகளை மீட்க தமிழ்நாடு வருகை தரும் அஸ்ஸாம் வனத்துறையினர் - assam forest department

ஜெயமாலா, லஷ்மி உள்பட 8 அஸ்ஸாம் மாநில யானைகளை மீட்க, தனது வனத்துறையினரை தமிழ்நாட்டிற்கு அனுப்ப அஸ்ஸாம் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

ஜெயமாலா யானையை மீட்க தமிழ்நாடு வருகை தரும் அஸ்ஸாம் வனத்துறையினர்
ஜெயமாலா யானையை மீட்க தமிழ்நாடு வருகை தரும் அஸ்ஸாம் வனத்துறையினர்

By

Published : Sep 1, 2022, 8:32 PM IST

அஸ்ஸாம்(குவஹாட்டி): ஜெயமாலா, லஷ்மி உட்பட பல்வேறு தமிழ்நாட்டு கோயில்களிலுள்ள 8 யானைகளை மீட்டு வருவதற்காக, தன் மாநில வனத்துறை அலுவலர்கள் மற்றும் யானைகளைக் கையாளத் தகுந்த வல்லுநர்களை தமிழ்நாட்டிற்கு அனுப்ப அஸ்ஸாம் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தில், அரசாங்க செலவில் தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களிலுள்ள அஸ்ஸாம் மாநில யானைகளைக் கொண்டுவர வேண்டுமென திட்டம் வகுக்கப்பட்டது.

அம்மாநில வனத்துறையின் உயரிய அலுவலர்கள் தமிழ்நாட்டு வனத்துறையிடம் இதுகுறித்து ஆலோசித்துள்ளனர். அஸ்ஸாமைச் சேர்ந்த 12 வயதான ஜெயமாலா எனும் யானை, தமிழ்நாட்டின் பல கோயில் நிர்வாகங்களால் கொண்டுவரப்பட்ட விவகாரத்தை பத்திரிகைகள் கையில் எடுக்க, இத்தகைய முடிவை அம்மாநில அரசும் எடுத்துள்ளது.

ஜெயமாலா உட்பட 8 யானைகளை மீட்க தமிழ்நாடு வருகை தரும் அஸ்ஸாம் வனத்துறையினர்

முன்னதாக, ஜெயமாலா மட்டுமின்றி, பல்வேறு தமிழ்நாட்டு கோயில்களில் ஏறத்தாழ எட்டு அஸ்ஸாம் யானைகள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதாக ஓர் தன்னார்வ நிறுவனம் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உடல் எடை கூடிவிட்டதால் மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய கணவர்..

ABOUT THE AUTHOR

...view details