தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அஸ்ஸாமில் போலி ரூபாய் நோட்டுகள் புழக்கம்..! 4 பேர் கைது... - போலி ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் இயந்திரம்

அஸ்ஸாமில் போலி ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் 2 இயந்திரங்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், நான்கு பேரை கைது செய்தனர்.

அஸ்ஸாமில் போலி ரூபாய் நோட்டுகள் புழக்கம்..! 4 பேர் கைது...
அஸ்ஸாமில் போலி ரூபாய் நோட்டுகள் புழக்கம்..! 4 பேர் கைது...

By

Published : Sep 9, 2022, 9:59 AM IST

Updated : Sep 9, 2022, 10:39 AM IST

அஸ்ஸாம் மாநிலம்நாகோன் மாவட்டத்தில் போலி இந்திய ரூபாய் நோட்டுகள் புழக்கம் அதிகரித்து வருவதாக, அம்மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் மாவட்டம் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் 2 போலி ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் இயந்திரங்கள், லட்சக்கணக்கான போலி 500 ரூபாய் நோட்டுகள், ஒரு இருசக்கர வாகனம், மூன்று செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதோடு போலி ரூபாய் நோட்டு தயாரிப்பில் ஈடுபட்ட ஜலால் உதின் (35), வன்லால்ருதி (42) மற்றும் ஜோரம்சானி (40) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஹோஜாய் மாவட்டத்தில் உள்ள டோபோகா மிகிராட்டி பகுதியில் போலி ரூபாய் நோட்டுகளுடன் அப்துல் ஜலீல் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீசார் தரப்பில், “போலி ரூபாய் நோட்டுகளை முடக்க காவலர் ஒருவரை போலி ரூபாய் நோட்டுகள் வாங்கும் வாடிக்கையாளராக, அனுப்பி தகவல்களை சேகரித்தோம். அதன்பின் குற்றம் உறுதி செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை நடந்துவருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த வடமாநில இளைஞர்கள் 4 பேர் கைது... 3 கிலோ கஞ்சா பறிமுதல்

Last Updated : Sep 9, 2022, 10:39 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details