தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெட்ரோல் ரூ.200 ஐ தாண்டினால் பைக்கில் 3 பேர் செல்ல அனுமதி...! - Assam minister's controversy

அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 200 ரூபாயைத் தாண்டினால் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் செல்ல அனுமதி பெற்றுத்தரப்படும் என அம்மாநில பாஜக தலைவர் பாபேஷ் கலிடா தெரிவித்துள்ளார்.

பைக்கிள் 3 பேர் செல்ல அனுமதி
பைக்கிள் 3 பேர் செல்ல அனுமதி

By

Published : Oct 20, 2021, 6:47 AM IST

அஸ்ஸாம் மாநில முன்னாள் அமைச்சர் பாபேஷ் கலிடா 2021 ஜூன் மாதத்தில் அம்மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து அவர் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில்,

“அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 200 ரூபாயைத் தாண்டினால் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் செல்ல அனுமதிக்கப்படும். இதற்கான அனுமதியை அரசிடமிருந்து பெற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இது குறித்து அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் பாபீடா சர்மா கூறியதாவது, “பாஜக மாநிலத் தலைவர் பாபேஷ் கலிடா எதற்காக இதனைத் தெரிவித்தார் எனத் தெரியவில்லை.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களின் தீவிரத்தை உணராமல் அவரது பேச்சு அவமதிக்கும் வகையில் உள்ளது” என்றார்.

இதையும் படிங்க:பாலியல் சீண்டல்.. இளைஞருக்கு பாடம் புகட்டிய அஸ்ஸாம் ஜான்சி ராணி!

ABOUT THE AUTHOR

...view details