தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அஸ்ஸாம் படகுகள் விபத்து: குற்ற வழக்காக பதிவுசெய்ய முதலமைச்சர் உத்தரவு - அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா

பிரம்புத்திரா நதியில் இரு ஒற்றை-இஞ்சின் படகுகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தை குற்ற வழக்காக பதிவுசெய்ய அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார்

அஸ்ஸாம் இரு படகு விபத்து:
அஸ்ஸாம் இரு படகு விபத்து:

By

Published : Sep 9, 2021, 3:08 PM IST

அஸ்ஸாம்:அஸ்ஸாம்மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியில் 90 பேருடன் மஜுலியிலிருந்து நிமாதிகாட்டிற்கு சென்றுகொண்டிருந்த 'எம்பி டிப்கை' என்ற படகும் , நிமாதிகாட்டிலிருந்து மஜுலிக்கு வந்துகொண்டிருந்த 'மா கமலா' என்ற படகும் நேற்று (செப். 8) மாலை 4 மணியளவில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்துக்கு பின்னர் தற்போதுவரை 87 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 30 வயது பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தை அடுத்து, இதுபோன்ற ஒற்றை-இஞ்சின் (Single Engine) படகுகளுக்கு தடை விதித்து அம்மாநில முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார்.

அலுவலர்களின் அலட்சியமே காரணம்

இந்த விபத்து குறித்து அவர் கூறுகையில்,"மூத்த அலுவலர்களின் ஆரம்பக்கட்ட விசாரணையில் அலட்சியம்தான் விபத்துக்கான முக்கிய காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. சில மணி நேரங்களுக்குள் இந்த வழக்கு குறித்து உயர்மட்ட விசாரணை தொடங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

அந்த வழித்தடத்தில் மொத்தம் 10 ஒற்றை-இஞ்சின் படகுகள் செயல்படுகிறது. இந்த ஒற்றை-இஞ்சின் படகுகளை மெரைன் இஞ்சினுக்கு மாற்ற படகு உரிமையாளர்களை அரசு வலியுறுத்தியுள்ளது.

மெரைன் இஞ்சின் வாங்குவதற்கான தொகையில் 75 விழுக்காடு அரசு மானியமாக வழங்கும் எனவும் மீதமுள்ள 25 விழுக்காடு தொகையை கடனாக வாங்கிக்கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. மெரைன் இஞ்சின் மாற்றுவதற்கான மானியத்தை பெற, மாவட்ட துணை ஆணையர் அலுவலகத்தில் இன்றிலிருந்தே விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அசாமில் படகு விபத்து - 100க்கும் மேற்பட்டோர் மாயம்

ABOUT THE AUTHOR

...view details