ஹைதராபாத்: அசாம் மாநிலத்தின் வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது.
அசாம் சட்டப்பேரவைத் தேர்தல்: என்ன சொல்கிறது வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள்! - அசாம் சட்டப்பேரவைத் தேர்தல்
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் அனைத்து கட்ட வாக்குப்பதிவும் நிறைவடைந்த நிலையில், அசாம் மாநிலத்தின் வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது.
அதன்படி மாநிலத்தில் உள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 3 கட்டங்களாக நடந்த வாக்குப்பதிவின் விகிதத்தைக் கொண்டும், பொதுமக்களின் கருத்துக்களைக் கொண்டும் வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் மத்தியில் ஆளும் பாஜக அரசு அம்மாநிலத்தில் அதிக இடங்களை பிடித்து ஆட்சியமைக்கும் எனதெரியவந்துள்ளது. எனினும், வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் 100 விழுக்காடு சரியாக இருக்காது என்பதால், மக்கள் அனைவரும் எதிர்பார்த்திருக்கும் தலைமையை அறிய மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடியும் வரை காத்திருப்போம்.