தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆர்யன் கான் கைது முதல் ஜாமீன்வரை: கடந்து வந்த பாதை! - ARYAN KHAN DRUGS CRUISE CASE FULL TIMELINE

கோவா - மும்பை கடலில் சொகுசுக் கப்பலில் நடந்த விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கைதான நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. அவர் கைதானது முதல் இன்றுவரை நடந்தவற்றை பார்க்கலாம்.

ஆர்யன் கான் கைது முதல் ஜாமீன்வரை
ஆர்யன் கான் கைது முதல் ஜாமீன்வரை

By

Published : Oct 28, 2021, 5:56 PM IST

  • அக்டோபர் 02:(நள்ளிரவு)மும்பை அருகே அரபிக்கடலில் கார்டிலியா என்னும் சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையின்போது, போதை மருந்து வைத்திருந்தாக நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • அக்டோபர் 03: பிடிபட்டவர்களில் ஆர்யன் கான், அவரது நண்பர்கள் அர்பாஸ் மெர்சன்ட், முன்முன் தமெச்சா ஆகியோர் கைது செய்யப்பட்டு விடுமுறை கால நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஒருநாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது
  • அக்டோபர் 04: ஆர்யன் கான் உள்ளிட்ட மூவரும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆர்யன் கானின் செல்போன் உரையாடல்கள் (Chats), அவரின் புகைப்படங்கள் ஆகியவற்றை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் (என்சிபி) நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து, ஆர்யன் கான் உள்பட மூவரையும் அக். 7ஆம் தேதிவரை விசாரணை காவலில் எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது
  • அக்டோபர் 07: மூவரின் காவலை நீட்டிக்க என்சிபி மீண்டும் கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், அவர்களை நீதிமன்ற காவலில் எடுக்க உத்தரவிட்டது. ஆர்யன் கான் உள்ளிட்ட மூவரின் தரப்பும் பிணை மனுவை தாக்கல் செய்தது
  • அக்டோபர் 08: நீதிமன்றம் மூவரின் பிணை மனுவையும் தள்ளுபடி செய்தது.
  • அக்டோபர் 09: ஆர்யன் கானிடம் இருந்து போதைப் பொருள் எதையும் கைப்பற்றவில்லை எனவும், அதை என்சிபி ஒப்புக்கொண்டுள்ளது எனவும் கூறி விடுமுறைக் கால நீதிமன்றத்தின் முன் ஆர்யன் கான் தரப்பு மீண்டும் பிணை மனுவை தாக்கல் செய்தது. அவரது நண்பர்கள் தரப்பில் இருந்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
  • அக்டோபர் 11: ஆர்யன் கான் மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என அவர் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டனர். அந்த மனு மீது அக்.13ஆம் தேதி என்சிபி பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது
  • அக்டோபர் 13: மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்களின் பிணை மனுக்கள் மறுநாளுக்கு (அக். 14) ஒத்திவைக்கப்பட்டது.
  • அக்டோபர் 14: ஆர்யன் கான் உள்ளிட்ட மூவரின் பிணை மனுவை அக். 20ஆம் தேதிவரை ஒத்திவைத்து மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பின்னர், மும்பை ஆர்தர் ரோடு சிறையில் ஆர்யன் கான் அடைக்கப்பட்டார்.
  • அக்டோபர் 20: ஆர்யன் கானின் பிணை மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
  • அக்டோபர் 21: 20 நாள்களுக்கு பின்னர், நடிகர் ஷாருக் கான் தனது மகன் ஆர்யன் கானை மும்பை ஆர்தர் ரோடு சிறையில் சந்தித்து பேசினார். ஆர்யன் கான் உள்பட மூவரின் பிணை மனுவை மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
  • அக்டோபர் 26: மும்பை உயர் நீதிமன்றம் மனு குறித்த விசாரணையை தொடங்கியது. இதனிடையே ஆர்யன் கான் விவகாரத்தில் லஞ்சம் கேட்பதாக அலுவலர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
  • அக்டோபர் 28: ஆர்யன் கான் உள்ளிட்ட மூவருக்கு பிணை வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்யன் சிறையில் 22 நாள்கள் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அக்.2ஆம் தேதிக்கு பின்னர் அவர் வீடு திரும்புகிறார்.

ABOUT THE AUTHOR

...view details