தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆர்யன் கானின் பிணை மனு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு - மும்பை உயர் நீதிமன்றம்

ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானின் பிணை மனு வழக்கு விசாரணையை மும்பை உயர் நீதிமன்றம் மீண்டும் ஒத்திவைத்துள்ளது.

Aryan Khan
Aryan Khan

By

Published : Oct 27, 2021, 7:51 PM IST

போதைப்பொருள் வழக்கில் கைதான ஆர்யன் கானின் பிணை மனு மும்பை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆர்யன் கான் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜரானார்.

போதைப்பொருள் தடுப்பு வாரியம் சார்பில் வழக்கறிஞர் அனில் சிங் ஆஜரானார். ஆர்யன் கான் தரப்பு தங்கள் வாதங்களை முன்வைத்த நிலையில், அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் அனில் சிங் நாளை பதில் அளிக்கவுள்ளார்.

வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்த உயர் நீதிமன்றம், விசாரணையை நாளைக்குள் முடிக்க முயற்சி செய்வதாகக் கூறியுள்ளது.

பிரபல நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான், மும்பை அருகே சொகுசுக் கப்பலில் நடந்த போதைப் பொருள் விருந்தில் கலந்துகொண்ட போது போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவலர்களால் அக்.3ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

அவரின் பிணை மனுவை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், ஆர்யன் கான் தரப்பு உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது.

இதையும் படிங்க:'பெகாசஸ்' இந்திய ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சி - ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details