தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராமாயண ராவணன் மறைவு: மோடி என்ன சொன்னார்னு தெரியுமா? - ராமாயண் மெகா தொடர்

மும்பை: ராமாயண தொலைக்காட்சித் தொடரில் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்த அரவிந்த் திரிவேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவருக்கு வயது 82.

Arvind Trivedi
Arvind Trivedi

By

Published : Oct 6, 2021, 12:26 PM IST

Updated : Oct 6, 2021, 1:02 PM IST

துர்தர்ஷன் தொலைக்காட்சியில் 1987ஆம் ஆண்டு ராமானந்த் சாகர் எழுதி, இயக்கி தயாரித்து தொடர் 'ராமாயணம்'. இந்தத் தொடரில் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் அரவிந்த் திரிவேதி. ராவணன் கதாபாத்திரத்தில் அவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

இதனைத்தொடர்ந்து அரவிந்த் திரிவேதி இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். மேலும் இவர் குஜராத்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

அரவிந்த் திரிவேதி நடிகராக மட்டுமல்லாது 1991 - 1996 காலகட்டத்தில் குஜராத்தில் உள்ள சபர்கதா தொகுதி மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டுவந்த அரவிந்த் திரிவேதி (82) இன்று அதிகாலை (அக். 6) காலமானார்.

இவரது மறைவுக்குத் திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "நாம் அரவிந்த் திரிவேதியை இழந்துள்ளோம். அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல, பொதுச்சேவையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

ராமாயணம் தொடரில் நடித்தற்காக அவர் பல தலைமுறை இந்தியர்களாலும் நினைவில் கொள்ளப்படுவார். அவரது குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மறு ஒளிபரப்பிலும் உலக சாதனைப் படைத்த 'ராமாயண்'

Last Updated : Oct 6, 2021, 1:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details