தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராவணன் வேடமணிந்து நடித்துக் கொண்டிருந்த கலைஞர் மேடையிலேயே உயிரிழப்பு - சீதா ஹரன்

அயோத்தியில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில் ராவணன் வேடமணிந்து நடித்துக் கொண்டிருந்த கலைஞர் மேடையிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்தியில் நடைபெற்ற ராம்லீலாவில் மேடையிலேயே உயிரிழந்த நாடக கலைஞர்
அயோத்தியில் நடைபெற்ற ராம்லீலாவில் மேடையிலேயே உயிரிழந்த நாடக கலைஞர்

By

Published : Oct 4, 2022, 10:27 AM IST

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்தில் உள்ள ஐஹார் கிராமத்தில் தசராவை முன்னிட்டு ‘ராம்லீலா' மேடை நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் ‘சீதா ஹரன்’ என்ற நாடக அரங்கேற்றத்தில், பதிரம் (60) என்ற நாடக கலைஞர் ராவணன் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, மேடையிலேயே சரிந்து விழுந்துள்ளார். பின்பு, நாடகக் குழுவினர் மற்றும் கிராம விழா கமிட்டியினர் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த பதிரத்திற்கு மனைவி, 2மகன், 2 மகள் உள்ளனர். இந்த நிகழ்வு ஜஹார் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் உத்திரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள சலேம்பூர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக் 2) நடைபெற்ற ராம்லீலா நாடகத்தின்போது, ஹனுமான் வேடத்தில் நடித்த ராம் ஸ்வரூப் (50) என்பவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தசராவுக்கு ‘நோ’ சொல்லும் உ.பி. கிராமம் - காரணம் ராவணன்?

ABOUT THE AUTHOR

...view details