டெல்லி:கடந்த 2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கம் செய்த மத்திய அரசு, ஜம்மு காஷ்மீரை சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக்கை சட்டப்பேரவை அல்லாத யூனியன் பிரதேசமாகவும் பிரித்து அறிவித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்குப் பல தரப்பிலிருந்து எதிர்ப்புக் குரல் வந்த நிலையில், மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராகப் பலரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்குகளை, ஒரே வழக்காக இந்தியத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில் டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று (டிச.11), சட்டப்பிரிவு 370 நீக்கம் செல்லும் எனவும், காஷ்மீரில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது.
முன்னதாக இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் ஒரே தீர்ப்பை அளித்திருந்தனர். நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றொரு தீர்ப்பை அளித்திருந்தார். நீதிபதி சஞ்சீவ் கண்ணா இரண்டு தீர்ப்புகளுக்கும் உடன்படுவதாகத் தெரிவித்திருந்தார். அதன்படி 3:2 என்ற பெரும்பான்மை அடிப்படையில் சட்டப்பிரிவு 370 நீக்கம் செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தனது தீர்ப்பு உரையின் போது நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், "காஷ்மீரில் ராணுவத்தின் ஊடுருவலால் மக்கள் மிகப்பெரிய விலையைக் கொடுத்துள்ளனர். 1980களில் இருந்து அங்கு எண்ணற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அதனால், நடுநிலையான உண்மைக் கண்டறியும் குழுவை அமைக்க நான் பரிந்துரைக்கிறேன்.