ஆந்திர பிரதேசம்:மார்கதர்சி சிட் பண்ட் நிறுவனத்தின் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் நாகமுத்து மற்றும் தம்மலாபதி ஸ்ரீனிவாஸ் ஆகியோர் இன்று ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வாதிட்டனர். அப்போது வாதிட்டவர்கள் சிட்பண்ட் சட்டத்தின் கீழ் சிட்பண்ட் நிறுவனத்தில் ஏதேனும் தவறுகள் நடந்தால் அதனை மாற்றுவதற்கு முழுமையான அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
சோதனையின் போது எதேனும் தவறுகள் கண்டுபிடுக்கப்பட்டால் நிறுவனத்தின் மேற்பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்தி அதனை சரி செய்து கொள்வதற்காக தான் சிட்பண்ட் சட்டம் பிரிவு 46 (3) உள்ளது என்றனர். குறைபாடுகளை சரி செய்யாவிட்டால் மட்டுமே சட்ட பிரிவு 48 (H) கீழ் சிட்பண்ட் குழு நடவடிக்கைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க முடியும். இந்நிலையில் உதவிப் பதிவாளர் சிட்பண்ட் மேற்பார்வையாளர்க்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை. எனவே சார்பதிவாளரால் அனுப்பப்பட்ட பொது அறிவிப்பு செல்லாது என வாதிடப்பட்டது.
அதன் அடிப்படையில் சிட் குழுக்கள் இடைநீக்கம் குறித்து சிட் பதிவாளரிடமிருந்து ஆட்சேபனைகளைப் பெறுவது குறித்து எந்த கேள்வியும் இல்லை. மேலும், சிட்பண்ட் சட்டத்தின்படி, உதவிப் பதிவாளர் மற்றும் துணைப் பதிவாளர் ஆகியோரும் 'பதிவாளர்' என்ற வரையறைக்குள் தான் வருகிறார்கள்.
உதவி பதிவாளர் (Assistant Registrar) மட்டுமே தவறுகளை சரி செய்ய மேற்பார்வையாளர்க்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும். மாறாக, உதவிப் பதிவாளரின் பரிந்துரையின் படி சிட் குழுக்களை இடைநிறுத்துவது தொடர்பாக ஆட்சேபனைகள் வரவேற்கப்படுகின்றன என்று சிட் பதிவாளர் பொது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
நோட்டீஸ் வழங்க பதிவாளருக்கு அதிகாரம் இல்லை என்றும் அது செல்லாது என்றும் 'சிபாரிசு' செய்யும் அதிகாரத்தை சட்டம் வழங்கவில்லை என வழக்கறிஞர் கூறினார். மார்கதர்சி சிட் குழுக்களை தடுக்கவும், தீங்கு விளைவிக்கவும் உள் நோக்கத்துடன் பொது நோட்டீஸ் வெளியிடப்பட்டது என நீதிமன்றத்தின் கவனத்திற்கு வழக்கறிஞர்கள் கொண்டு சென்றனர்.
பொது அறிவிப்பை நிறைவேற்றுவதை நிறுத்தி வைத்து, அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க கோரியிருந்தனர். நேற்று (ஆகஸ்ட் 7) நடைபெற்ற விசாரணையில் மூத்த வழக்கறிஞர்களின் வாதங்கள் முடிவடைந்ததால், மாநில அரசு சார்பில் ஏ.ஜி.ஸ்ரீராம் வாதிடுவதற்காக விசாரணை இன்று(ஆகஸ்ட் 8) ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த ஜூலை 30 ஆம் தேதி சிட்பண்ட் பதிவாளர் வெளியிட்ட பொது அறிவிப்பின் அடிப்படையில் சிட் குழுக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து மார்கதர்சி சிட்பண்ட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி பி ராஜாஜி உயர்நீதிமன்றத்தை அணுகினார். குண்டூர், கிருஷ்ணா மற்றும் பிரகாசம் மாவட்டங்களின் சிட் குழுக்கள் வழக்கில் வெளியிடப்பட்ட பொது அறிவிப்பை எதிர்த்து மூன்று தனித்தனி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று நடைபெற்ற விசாரணையில், கிருஷ்ணா, பிரகாசம் மாவட்ட சிட் குழுக்களில் தொடரப்பட்ட வழக்குகளில் மூத்த வழக்கறிஞர்கள் வாதங்களைக் கேட்டனர்.
சந்தாதாரர்களின் பணத்திற்கு 100% பாதுகாப்பு:மூத்த வழக்கறிஞர் நாகமுத்து வாதிட்ட போது, சந்தாதாரர்களின் நலன்களைப் பாதுகாக்க சிட்பண்ட் சட்டத்தில் விதிகள் உள்ளன. "சிட் பண்ட் சட்டத்தின் பிரிவு 46 (3) சிட் குழுக்களை சரிசெய்யும் நோக்கத்துடன் சிறிய தவறுகள் நடந்ததாகக் கூறி சஸ்பெண்ட் செய்யக்கூடாது.
பிழைகள் கண்டறியப்பட்டால் அவற்றைச் சரிசெய்வதற்கான அறிவிப்புகளை வெளியிடுவதற்கு சிட் பதிவாளர்கள் பொறுப்பு.இங்கு, ஆய்வு நடத்திய உதவிப் பதிவாளர், பிழைகளை சரி செய்ய நோட்டீஸ் வழங்கவில்லை. சட்டப்படி, சந்தாதாரர்களின் பணத்துக்கு, 100 சதவீதம் பாதுகாப்பு வழங்கப்படுகிறது எனவே அவர்களின் நலன்களுக்கு பிரச்னை இருக்காது” என்றார்.
இடைநீக்க உத்தரவு: மூத்த வழக்கறிஞர் தம்மலாபதி ஸ்ரீனிவாஸ் கூறுகையில், பிரகாசம் மாவட்டத்தில் சிட் குழுக்கள் தொடர்பாக பொது அறிவிப்பு கொடுப்பதற்கு முன்பு சில குழுக்களை நிறுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன் பிறகு ஆட்சேபனைகள் வரவேற்கப்படுகின்றன. இது சட்ட விதிகளுக்கு எதிரானது என நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
மேலும் அவர் பேசுகையில் "ஒரே மாதிரியான குற்றச்சாட்டுகளுடன் ஒரே மாதிரியான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் தவறுகள் கண்டறியப்பட்டால் விவரங்களைக் கூறி பிழைகளை சரி செய்ய மீண்டும் அறிவிப்பு வெளியிட வேண்டும். ஆனால் அவர்கள் சட்டபடி பின்பற்றவில்லை, இது நீதிக்கு முரணானது.
அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளும் முன் தலைமை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என விதிகள் தெளிவாக கூறுகின்றன. இல்லாமல் நேரடி நடவடிக்கை எடுக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நிதி விவகாரங்களில் நோட்டீஸ் வழங்குதல். இந்தக் காரணிகளைக் கருத்தில் கொண்டு, பொது அறிவிப்பின் அடிப்படையில் அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நிறுத்துங்கள்" என வாதிட்டார்.
இதையும் படிங்க:மாநிலங்களவையில் இருந்து திரிணாமுல் எம்.பி. இடைநீக்கம்.. எஞ்சிய கூட்டங்களில் பங்கேற்க தடை!