தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - today important news

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகளைச் சுருக்கமாகக் காணலாம்.

NEWS TODAY
இன்றைய நிகழ்வுகள்

By

Published : Apr 30, 2021, 6:31 AM IST

Updated : Apr 30, 2021, 6:44 AM IST

1. மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

பிரதமர் மோடி ஆலோசனை

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கரோனா தொற்று தொடர்பாக, மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) காணொலி மூலமாக ஆலோசனை நடத்துகிறார்

2. திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

மு.க. ஸ்டாலின்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், இன்று (ஏப்ரல்.30) திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெறுகிறது.

3. ஐபிஎல் 2021: பஞ்சாப் - பெங்களூரு மோதல்

ஐபிஎல் 2021

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் 26ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

4. இன்றுடன் கும்பமேளா நிறைவு

கும்பமேளா

ஹரித்துவாரில் ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா விழா, இன்றுடன் நிறைவடைகிறது. வழக்கமாக நான்கு மாதம் நடைபெறும் கும்பமேளா, கரோனா காரணமாக ஒரு மாதமாகக் குறைக்கப்பட்டது.

5.உ.பி., முழு ஊரடங்கு நீட்டிப்பு

யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேசத்தில் இன்று முதல் மே 4 ஆம் தேதி 5 நாள்களுக்கு முழு ஊரடங்கு அமலப்படுத்தப் படுவதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

Last Updated : Apr 30, 2021, 6:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details