டெல்லி: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீதான ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை அக்டோபர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கைத் தாக்கல் செய்திருந்தது. அதில், "2016 - 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத் துறையை வைத்து இருந்தார். அப்போது நெடுஞ்சாலைத் துறையின் மூலம் விடப்பட்ட ஒப்பந்தப்புள்ளியில் முறைகேடுகள் நடந்ததாக 2018ஆம் திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் உறவினர்களுக்கு ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கியது மற்றும் சாலைகள் அமைப்பதில் முறைகேடு போன்ற புகார்களைத் தெரிவித்து இருந்தார்.
ஆனால் அப்போது தமிழ்நாடு ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆரம்பக் கட்ட விசாரணையில் முறைகேடு நடந்ததற்கு ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றத்தில் அறிக்கை அளித்தது. இதனையடுத்து அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையும் படிங்க:விளம்பரப் பலகை விழுந்ததில் கல்லூரி மாணவர் இறப்பு.. ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!