தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

என்.டி.ஆர் பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றும் ஜெகன் மோகன் ரெட்டி! - என் டி ஆர் பல்கலைக்கழகம்

ஆந்திராவிலுள்ள என்.டி.ஆர் பல்கலைக்கழகத்தின் பெயரை ஒய்.எஸ்.ஆர் பல்கலைக்கழகம் என முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மாற்ற முடிவுசெய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

என்.டி.ஆர் பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றும் ஜெகன் மோகன் ரெட்டி...!
என்.டி.ஆர் பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றும் ஜெகன் மோகன் ரெட்டி...!

By

Published : Sep 21, 2022, 6:43 PM IST

ஆந்திரப் பிரதேசம்:ஆந்திரப் பிரதேசத்திலுள்ள என்டிஆர் ஆரோக்யா மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பெயரை ஒய்எஸ்ஆர் பல்கலைக்கழகம் என மாற்றுவதற்கான சட்டதிருத்த மசோதா இன்று(செப்.21) ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

அந்த மருத்துவப்பல்கலைக்கழகத்திற்கும் என்டிஆருக்கும் நெருங்கிய உறவு இருந்தது. இந்திய அளவில் மருத்துவத்திற்கு ஓர் தனிப் பல்கலைக்கழகம் என அங்கீகாரமும் அவரால் தான் கிடைத்தது. இதனால் தான் அவரது மறைவிற்குப்பிறகும், அவருக்குப் பின் வந்த ஆட்சியாளர்கள் அந்த பல்கலைக்கழகத்திற்கு என்டிஆர் பெயரை சூட்டினர். கடந்த 24 ஆண்டுகளாக இந்தப் பல்கலைக்கழகம் இந்தப் பெயருடன் தான் செயல்பட்டது.

இந்நிலையில், தற்போது அந்தப்பெயரை ஜெகன் மோகன் ரெட்டி மாற்றியுள்ளது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. அவரது பெயரை இந்த ஒய்எஸ்ஆர் அரசு இருட்டடிப்பு செய்யப் பார்க்கிறது எனவும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

ஆந்திரப்பிரதேசம் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் எனும் பெயரில் நவம்பர் 1, 1986ஆம் ஆண்டு இந்தப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. அதன்பின்பு ஜனவரி 8, 1996ஆம் ஆண்டு, இந்த பல்கலைக்கழகம் என்டிஆர் ஆரோக்யா பல்கலைக்கழகம் என முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு ஆட்சிக்காலத்தில் மாற்றப்பட்டது.

அதன்பின்பு, ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஆட்சிக்காலத்தில் டாக்டர். என்.டி.ஆர் சுகாதாரப் பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்தப் பெயரை ஜெகன் மோகன் ரெட்டி அரசு, மாற்ற முனைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பெங்களூரு எங்கும் ஒட்டப்பட்ட 'PAYCM' போஸ்டர்கள்; ஒட்டியவர் மீது வழக்கு

ABOUT THE AUTHOR

...view details