பாட்னா:மத்தியில் ஆட்சியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி அரசை, 2024ஆம் ஆண்டில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் தோற்கடிக்கும் பொருட்டு, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி, தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து, பிகார் தலைநகர் பாட்னாவில், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பிகார் மாநில முதலமைச்சருமான நிதீஷ் குமார் தலைமையில் கூட்டத்தை நடத்தியது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற எதிர்கட்சிகளின் இரண்டாவது கூட்டத்தில் 15க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்று இருந்தன. இந்த கூட்டத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே தலைமையேற்றார். இந்த கூட்டத்தில் தான், எதிர்கட்சிகளின் கூட்டமைப்பிற்கு, இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணி (INDIA) என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது.
இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணியின் (INDIA) ஒருங்கிணைப்பாளர் பதவி விவகாரத்தில், கூட்டணி கட்சிகள் இடையே, எவ்வித மனஸ்தாபமும் ஏற்படவில்லை என்று ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவரும், பிகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்து உள்ளார்.