மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், 124 காலாட்படை பட்டாலியன் ராணுவத்தில் கேப்டனாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அமைச்சராக இருந்து ராணுவத்தில் பதவி உயர்வு பெற்ற முதல் நபர் இவராவார். 46 வயதான இவர் கடந்த 2016இல் லெப்டினெண்டாக ராணுவத்தில் சேர்க்கப்பட்டார்.
கேப்டன் ஆனார் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் - 124 காலாட்படை பட்டாலியன்
டெல்லி: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ராணுவத்தில் கேப்டனாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
அனுராக் தாக்கூர்
இதுகுறித்து பேசிய அவர், "நான் 2016இல் லெப்டினெண்டாக ராணுவத்தில் நியமிக்கப்பட்டேன். இன்று, கேப்டன் பதவிக்கு உயர்ந்துள்ளதைப் பகிர்வதில் பெருமையடைகிறேன். மக்களுக்குச் சேவை செய்வதற்கான எனது உறுதிப்பாட்டை நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கரோனா தடுப்பூசி போட்டு கொண்ட பிரதமர் மோடியின் தாயார்!