ராய்ப்பூர்:சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் லக்கிம்பூரிலிருந்து திரும்பிய பிறகு நேற்று (அக். 11) செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது அவர், "உத்தரப் பிரதேச பாஜக ஆட்சியின் மீதான எதிர்ப்பலை உருவாகியுள்ளது.
உழவர், இளைஞர்கள், பட்டியலின மக்கள் முதல் வணிகர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது வருத்தத்தில் உள்ளனர். அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலில் யோகி அரசு கண்டிப்பாக ஆட்சியைத் தக்கவைக்காது" எனத் தெரிவித்தார்.
என்றும் இரட்டை நிலைப்பாடுதான்
மேலும், சத்தீஸ்கர் முன்னாள்முதலமைச்சர் ராமன் சிங் தன்மீது வைத்து குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவித்துப் பேசிய அவர், "சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற மேற்கு வங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பின், அங்கு ஏற்பட்ட கலவரத்திற்கு சத்தீஸ்கர் பாஜகவினர் இங்கு போராட்டம் நடத்தினர்.