பெங்களூர்:பெங்களூரில் உள்ள வில்சன் கார்டன் பகுதியில் மூன்றுமாடிக் கட்டடம் நேற்று காலை 11 மணியளவில் சரிந்து விழுந்தது. இந்தக்கட்டிடம் மோசமான நிலையில் இருந்ததால், அதில், வசித்தவர்கள் வீடுகளை முன்னதாக காலிசெய்திருந்தனர்.
இதனால், உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.