ஹைதராபாத்: நடிகை ராஷ்மிகா மற்றும் ரன்வீர் கபூர் இணைந்து நடித்துள்ள 'அனிமல்' (Animal) திரைப்படத்தின் 'நீ வாடி' இந்தியில் ஹூ மேயின்(Hua Main) என்ற பாடலை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான கூடுதல் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தொடர்ந்து தனது எதார்த்தமான நடிப்பின் மூலம், குறுகிய காலத்தில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை அதிகரித்த நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. கர்நாடகத்தை பூர்விகமாகக் கொண்ட ராஷ்மிகா நடிப்பில் வெளியான கிரிக் பார்ட்டி, கீதா கோவிந்தம், புஷ்பா உள்ளிட்ட படங்கள் இவருக்கு பெயர் சொல்லும் படங்களாக அமைந்தது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் ராஷ்மிகாவுக்கு கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில், நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ஏற்பட்ட கெமிஸ்ட்ரி, ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் வரவேற்பை பெற்றது. இந்தப் படங்களின் காட்சிகளும், பாடல்களும் இன்றளவும் சமூகவலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.
இதைத் தொடர்ந்து, நடிகை ராஷ்மிகா தமிழில் கார்த்தியுடன் இணைந்து 'சுல்தான்' என்ற படத்திலும் நடித்துள்ளார். தொடர்ந்து தமிழில் நடிகர் விஜயுடன் இணைந்து 'வாரிசு' திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் இவருக்கு பெரிய அளவில் கைக்கொடுக்கவில்லை. 2023-ல் இவர் நடிப்பில் இரண்டு படங்களே தற்போது வரை வெளிவந்துள்ளது.
வாரிசுக்கு பிறகு 'மிஷன் மஞ்சு' என்ற திரைப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இணைந்து நடித்தார். இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று நம்பி இருந்த வேளையில், படக்குழு படத்தை ஒடிடியில் வெளியிட்டது. இது அவருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அதனால் அதிகளவில் எதிர்பார்த்து காத்திருக்கும் படமாக அமைந்துள்ளது, சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் வெளியாகவுள்ள 'அனிமல்' திரைப்படம்.
'அனிமல்' படத்தில் இடம்பெற்றுள்ள 'ஹுவா மேயின்' (Hua Main) தமிழில் 'நீ வாடி' பாடலை ராஷ்மிகா அவரது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் பாடல், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது என்றும், ரசிகர்களின் விருப்பப் பாடல் பட்டியலில் ஒன்றாக ஹூவா மேயின் பாடலும் இருக்கும் என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.
இதற்கு, நெட்டிசன்கள் அவர்களின் கருத்துக்களை காரசாரமாக தெரிவித்து வருகின்றனர். இந்தப் பாடலில் நடிகை ராஷ்மிகா, ரன்வீர் கபூருடன் விமானத்தில் விமானி அறையில் இருப்பது போன்ற காட்சிகளுடன் வெளியான இந்த பாடலுக்கு லைக்ஸ்களை கடந்து, கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.
பட கெமிஸ்ட்ரியில் விஜய் தேவரகொண்டாவை பின்னுக்கு தள்ளியுள்ளார் ரன்வீர் என்றும், ராஷ்மிகா மற்றும் ரன்வீரின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருப்பதைப் போன்று, ஆலியாபட்டும் விஜய் தேவரகொண்டாவும் இணைந்து நடித்து வரும் படத்தில் 'அனிமெல் தி ஃபில்ம்' என்ற பாடல் வெளியாகியுள்ளதாக கேலி செய்து பதிவிட்டுள்ளது நெட்டிசன்கள் மத்தியில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
கேலி, கிண்டல்களை கடந்து இந்தப்படம் பெரும் வெற்றிப்படமாக அமையும் என ராஷ்மிகாவின் ரசிகர்கள் ஆதரவு திரட்டி வருகின்றனர். ராஷ்மிகா மற்றும் ரன்வீர் கபூர் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப்படம் டிசம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளுக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்தப்படத்தில் அனில் கபூர், பாபி தியோல் போன்ற முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர். மேலும் பூஷன் குமார், முராத் கெடானி இயக்கத்தில் வெளியாகும் இந்த படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைத்துள்ளார். இந்த வருடம் ராஷ்மிகா நடிப்பில் வெளியான படங்களில் பெரும் வெற்றியை பெறாத நிலையில் இந்தப் படம் மீது ராஷ்மிகா அதிகளவில் நம்பிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:லியோ சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி!