ஹல்த்வானி: கிராமங்களில் வசிக்கும் இளைஞர்கள், வேலை தேடி நகரங்களுக்கு இடம்பெயர்வதே வாடிக்கையாக உள்ளது. மாறாக கிராமங்களிலேயே சுயதொழில் செய்ய முனைவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவு. சுயதொழில் செய்ய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கினாலும், துணிந்து அதில் இறங்க பெரும்பாலானோர் தயங்குகின்றனர்.
இந்த நிலையில், உத்தரக்காண்ட் மாநிலத்தில் உள்ள மலைக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சுயதொழில் செய்து, கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்கி வருகிறார்.
ஹல்த்வானி அருகே உள்ள கர் கிராமத்தைச் சேர்ந்த அனில் பட் என்பவர், மாநில அரசின் சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தனது தரிசு நிலத்தில் சோலார் மின் உற்பத்தி நிலையத்தை நிறுவியுள்ளார். 300 கிலோவாட் உற்பத்தி திறன் கொண்ட இந்த சோலார் மின் உற்பத்தி நிலையம் மூலம் மின் உற்பத்தி செய்து, அதனை அரசுக்கு விற்பனை செய்கிறார்.