விசாகப்பட்டினம்: Andhra Pradhesh Night Curfew: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா தொற்றால், ஆந்திரப் பிரதேச மாநில அரசு இன்று ஜன.18ஆம் தேதி முதல் இரவுநேர ஊரடங்கு பிறப்பித்துள்ளது. அதன்படி, இரவு 11.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருமணம், ஆன்மிகம் சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கரோனா கட்டுப்பாட்டு நிபந்தனைகளுடன் பொது நிகழ்ச்சிகளில் 100 முதல் 200 பேர் வரை கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.