தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அணையில் மூழ்கிய பழங்கால கோயில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு திறப்பு - தரிசனம் செய்ய குவியும் பக்தர்கள் - karnataka recent news

கர்நாடகாவில், கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், ஹிடகல் அணையில் மூழ்கி இருந்த விட்டல சுவாமி கோயில் பக்தர்களின் தரிசனத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது.

karnataka
karnataka

By

Published : Jul 2, 2023, 7:31 PM IST

பெலகாவி (கர்நாடக மாநிலம்): ஜூன் மாதம் முடிந்தும் கூட வட கர்நாடகாவில் சில பகுதிகளில் இன்னும் மழைக்கான அறிகுறிகளே தென்படவில்லை. ஏற்கனவே பல மாவட்டங்களில் பெரும்பாலான நதிகள் வறண்ட நிலையில் உள்ளன. மழை இல்லாத காரணத்தினால் வட கர்நாடகாவில் உள்ள பல அணைகளில் நீரின்றி காட்சியளிக்கிறது. இதே போல், கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம், ஹுக்கேரி தாலுகாவில் உள்ள ஹிடகல் அணையில் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, நீரின்றி அணை காலியாக உள்ளது.

இந்நிலையில் அங்கு உள்ள ஒரு பழமையான கோயில் தரிசனத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அணையின் நீர் பிடிப்புப் பகுதியில் போதுமான அளவு நீரின்றி இருப்பதால், மூழ்கிய பழமையான விட்டல கோயில், பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டு, கடந்த ஜூன் 29ஆம் தேதி ஆஷாட ஏகாதசியை முன்னிட்டு திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏராளமானோர் விட்டல சுவாமியை தரிசனம் செய்து பக்தர்கள் பரவசமடைந்தனர்.

இக்கோயிலானது 1928ம் ஆண்டு கட்டப்பட்டது. விட்டல கோயில் முற்றிலும் கல்லால் கட்டப்பட்டுள்ளது. அதன் பின்பு 1977ம் ஆண்டு ஹிடகல் நீர்த்தேக்கமானது கட்டப்பட்டபோது விட்டல கோயில் முற்றிலுமாக நீரில் மூழ்கியுள்ளது. அதற்குப் பின்பு, நீர் குறைந்தால் மட்டுமே கோயிலைப் பார்க்க முடியும். தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தக் கோயிலானது முழுமையாக காட்சியளித்து இருக்கிறது.

வருடத்தில் பத்து மாதங்கள் நீர் அதிகம் இருப்பதால் கோயிலானது நீரில் முழுமையாக மூழ்கி இருக்கும். கோடைக் காலங்களில் அதாவது வருடத்தில் 2 மாதங்கள் மட்டுமே அணையில் நீர் சற்று குறைவதால் பாதி, கோயிலை நம்மால் காணமுடியும். இந்நிலையில் இந்த வருடம் வறட்சி அதிகம் இருப்பதால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கோயில் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த ஜூன் 29ம் தேதியன்று ஆஷாட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இக்கோயிலுக்கு விட்டல சுவாமியைத் தரிசனம் செய்ய வந்த பக்தர் ஒருவர் கூறுகையில், 'இந்தக் கோயிலுக்கு வரலாற்று பாரம்பரியம் உள்ளது. மேலும், 12 ஆண்டுகளாக நீரில் மூழ்கிய போதிலும் கோயிலுக்கு ஒரு சிறிய சேதம் கூட ஏற்படவில்லை. அதுமட்டுமில்லாமல் இதுவரை பழைய கட்டடத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இத்தலமானது பக்தர்கள் அதிகம் வந்து தரிசனம் செய்யக்கூடிய இடமாக இருக்கிறது. நீரில் உள்ளபோது தூரத்திலிருந்து பெருமானை தரிசனம் செய்யலாம். இப்போது நீர் முழுமையாக இல்லாத காரணத்தினால் கோயில் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது' என்றார்.

இதையும் படிங்க:கோவை ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு புதிய கார் புக்கிங் பணிகள் நிறைவு - வாயைப் பிளக்கவைக்கும் விலை!

ABOUT THE AUTHOR

...view details