மறைந்த பஞ்சாபி நடிகர் தீப் சித்து ‘வாரிஸ் பஞ்சாப்’ (Waris Punjab) என்ற அமைப்பை உருவாக்கினார். இதற்கு தலைவராகவும் தீப் சித்து பொறுப்பேற்றார். அப்போது சிம்ரஞ்சித் சிங் மான் எம்பிக்கும் தனது ஆதரவை தீப் சித்து வழங்கி வந்தார். இதனிடையே கடந்த பிப்ரவரி 15 அன்று தீப் சித்து உயிரிழந்தார்.
இந்நிலையில் தற்போது வாரிஸ் பஞ்சாப் அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வாரிஸ் பஞ்சாப் அமைப்பின் முதல் ஆண்டு விழாவை முன்னிட்டு, அம்ரித்பால் சிங் தலைப்பாகை அணிந்து அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றார்.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வாரிஸ் பஞ்சாப் அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் நியமனம் ஆனால் இவர் காலிஸ்தானி அமைப்பினருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், சட்டவிரோதமாக செயல்படும் நபர்களுடன் கூட்டு வைத்திருப்பதாகவும் பல்வேறு சீக்கிய மத அமைப்பின் தலைவர்களும் குற்றம்சாட்டுகின்றனர். அதேநேரம் சிம்ரஞ்சித் மான் சிங் தனது ஆதரவை அம்ரித்பாலுக்கு வழங்கியுள்ளார்.
இதனால் பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அம்ரித்பால் சிங், வாரிஸ் அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இதையும் படிங்க:திருப்பதியில் ஆன்டி-பிராமின் சக்திகள் உள்ளது, தீட்சிதர் சர்ச்சைக்குரிய ட்வீட்