தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடகாவில் விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்.. 3 பேர் உடல் நசுங்கி பலி!

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் தமிழகத்தை சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

By

Published : Jun 8, 2023, 12:27 PM IST

நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு!
நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு!

சித்ரதுர்கா: திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 17). அவர் அகமதாபாத்தில் உயிரிழந்துள்ள நிலையில், அவரது உடலை அவரது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு கொண்டுச் செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஆம்புலன்சில் அவரை கொண்டு செல்லும் போது எதிர்பாராத விதமாக, இன்று அதிகாலை (ஜூன் 8) 4 மணி அளவில் புனே - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது ஆம்புலனஸ் மோதி விபத்துக்குள்ளானது.

அந்த விபத்தில் ஆகாஷின் உடலோடு பயணித்த கனகமணி (72) மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் என அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தை தொடர்ந்து, அக்கம் பக்கதில் உள்ளோர் கொடுத்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று காயமடைந்த இருவரையும் போலீசார் மீட்டு சித்ரதுர்கா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:நீ மட்டும்தான் வீடியோ காட்டுவியா? - ஆபாச வீடியோவால் இளைஞரை கொலை.. தென்காசி எலும்புக்கூடு வழக்கில் பகீர் தகவல்!

மேலும், புனே - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இத்தகைய விபத்தில், ஆம்புலன்சின் முன் பாகம் முழுவதுமாக நொறுங்கியிருந்தது. அதன் பின் ஆம்புலன்சில் இருந்த உடலை போலீசார் மீட்டு அதனை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்தவர்கள் கனகமணி, ஆகாஷ் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் என்பதும் மேலும் அகமதாபாத்தில் உயிரிழந்த ஆகாஷை அவரது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு கர்நாடகா வழியாக அழைத்து செல்லும் போது, சித்ரதுர்காவின்மல்லப்பூர் அருகே சாலையில் நின்றிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதும் தெரியவந்தது.

ஆனால் அந்த வாகனத்தின் எண்ணை விசாரித்த போலீசார் அது ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து வந்த ஆம்புலன்ஸ் என்பதை உறுதி செய்தனர். தற்போது இந்த விபத்து குறித்து சித்ரதுர்கா கிராமிய காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்க வாய்ப்பு?

ABOUT THE AUTHOR

...view details