தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு இரண்டாவது முறையாக கரோனா பாதிப்பு - akshay kumar latest updates

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு இரண்டாவது முறையாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் கேன்ஸ் திரைப்பட விழாவில் தன்னால் கலந்து கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அக்‌ஷய் குமாருக்கு இரண்டாவது முறையாக கரோனா பாதிப்பு
அக்‌ஷய் குமாருக்கு இரண்டாவது முறையாக கரோனா பாதிப்பு

By

Published : May 15, 2022, 10:14 AM IST

மும்பை: பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு இரண்டாவது முறையாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேன்ஸ் திரைப்பட விழாவில் தன்னால் கலந்து கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "கேன்ஸ் 2022இல் இந்தியா பெவிலியனில் எங்கள் சினிமாவுக்கு வேரூன்றுவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எனக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கும் உங்கள் முழு குழுவிற்கும் வாழ்த்துக்கள் அனுரக்தாகூர். உண்மையில் நான் அங்கு இருப்பதை இழக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவது இது இரண்டாவது முறை. முன்னதாக ஏப்ரல் 2021இல், அவர் கரோனாவால் பாதிக்கப்பட்டார். சர்வதேச அளவிலான சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கேன்ஸ் திரைப்பட விழாவின் 75ஆவது திரைப்பட விழா மே 17ஆம் தேதி கேன்ஸில் (பிரான்ஸ்) தொடங்க உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள திரைக் கலைஞர்கள் சங்கமிக்கும் கேன்ஸ் திரைப்பட விழா வரும் மே 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு இந்திய திரைத்துறையின் 12 பிரபல நட்சத்திரங்கள் அடங்கிய குழு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் பங்கேற்க உள்ளது.

அக்குழுவில், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், கிராமப்புற இசையமைப்பாளர் மற்றும் பாடகர் மாமே கான், நடிகர் மாதவன், பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் நயன்தாரா, பூஜா ஹெக்டே, தமன்னா பாட்டியா, வாணி திரிபாதி திரைப்பட தணிக்கை வாரியத் தலைவர் பிரசூன் ஜோஷி, இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூர் ஆகியோர் அடங்குவர்.

இவர்கள் அனைவருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவின் காலாவில் (Gala) சிவப்புக் கம்பள வரவேற்பு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பேருந்து கட்டணம் உயர்வு மக்களை பாதிக்கும்: ஓ.பன்னீர்செல்வம்

ABOUT THE AUTHOR

...view details