மேற்கு ஆசிய பிராந்திய நாடுகளின் பாதுகாப்பு பேச்சுவார்த்தை பாதுகாப்பு ஆலோசகர்களிடையே இன்று (நவ.11) நடைபெற்றது. இதில் ரஷ்யா, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், ஈரான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ் ரிபப்ளிக், இந்தியா உள்ளிட்ட ஏழு நாடுகள் பங்கேற்றன.
இதில் இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினர் வெளியேற்றத்திறக்குப் பின், ஜனநாயக அரசு கவிழ்ந்து தலிபான் ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த மாற்றம் பிராந்தியத்தின் பாதுகாப்பு, அமைதியில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.