நாடு முழுவதும் உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற கோரியும், எண்ணைய் நிறுவனங்களுக்கு ஆதரவாக செல்படும் ஒன்றிய அரசைக் கண்டித்தும் புதுச்சேரி ஏஐடியுசி சார்பில் ஆட்டோ தொழிலாளர்கள் 15க்கும் மேற்பட்டோர் மாட்டு வண்டியின் மீது ஆட்டோவை நிறுத்தி, பாக்கமுடையான்பேட் ஈசிஆர் சாலையில் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றிய அரசைக் கண்டித்து புதுச்சேரியில் ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - ஒன்றிய அரசு
புதுச்சேரி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற கோரியும், ஒன்றிய அரசைக் கண்டித்தும் ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர்கள் மாட்டு வண்டியில் ஆட்டோவை நிறுத்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றிய அரசைக் கண்டித்து புதுச்சேரியில் ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர்கள்
பெட்ரோல், டீசல் விலை
அப்போது அவர்கள் ஒன்றிய அரசைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலையை திரும்பபெறக் கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், உடனடியாக ஒன்றிய பாஜக அரசு விலை உயர்வை திரும்பப் பெறவில்லையென்றால், அனைத்து பொதுப் போக்குவரத்து தொழிலாளர்களையும் ஒன்று திருட்டி மாநிலம் தழுவிய அளவில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.