தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜூனியர் விம்பிள்டள் - இளம் இந்தியா வீராங்கனை ஐஸ்வர்யா ஜாதவ் அசத்தல்!

ஜூனியர் விம்பிள்டனில் இந்தியா சார்பாக கோலாப்பூரைச் சேர்ந்த ஐஸ்வர்யா ஜாதவ் கலந்து கொண்டு , இளம் வயதில் பங்கேற்ற பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

விம்பிள்டன் போட்டியில் பங்கேற்ற முதல் இந்தியா வீராங்கனை ஐஸ்வர்யா ஜாதவ்!
விம்பிள்டன் போட்டியில் பங்கேற்ற முதல் இந்தியா வீராங்கனை ஐஸ்வர்யா ஜாதவ்!

By

Published : Jul 14, 2022, 5:59 PM IST

Updated : Jul 14, 2022, 10:59 PM IST

கோலாப்பூர் (மகாராஷ்டிரா): அக்டோபர் 4, 2008 அன்று மகாராஷ்டிரா மாநிலம் பன்ஹாலா தாலுகாவின் யவலுஜில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர், ஐஸ்வர்யா ஜாதவ். தந்தை தயானந்த் ஜாதவ் நில அளவையாளராகவும், தாயார் அஞ்சலி ஜாதவ் இல்லத்தரசியாகவும் உள்ளார். ஐஸ்வர்யா ஜாதவ், பெற்றோரின் ஊக்கத்தால் சிறு வயதிலேயே லான் டென்னிஸ் (புல்வெளியில் ஆடும் டென்னிஸ்) விளையாடத் தொடங்கினார்.

விம்பிள்டன் போட்டியில் பங்கேற்ற முதல் இந்தியா வீராங்கனை ஐஸ்வர்யா ஜாதவ்!

பின்னர் தங்கள் குழந்தைகளின் கல்விக்காகவும், ஐஸ்வர்யாவின் டென்னிஸ் விளையாட்டைத் தொடரவும் யாவ்லுஜ் கிராமத்தை விட்டு நகரத்திற்கு செல்ல முடிவு செய்தனர். இதனால் தற்போது சர்க்யூட் ஹவுஸ் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். ஐஸ்வர்யா ஜாதவ், சிறுவயதில் இருந்தே லான் டென்னிஸ் விளையாட்டிற்கான பயிற்சியை செய்து வந்தார்.

இந்த முயற்சியின் காரணமாக இங்கிலாந்தில் நடைபெறும் உலக புகழ் பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் , 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஐஸ்வர்யா ஜாதவ் விளையாடுவதற்கு தகுதி பெற்றார். இதற்காக பல நிலைகளிலான போட்டிகளை கடந்து வந்தார், ஐஸ்வர்யா. இதற்காக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இதையும் படிங்க:ஐசிசி பவுலிங் தரவரிசை - நம்பர் 1 இடத்தை பிடித்த பும்ரா

Last Updated : Jul 14, 2022, 10:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details