கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக போக்குவரத்து சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு வழிமுறைகளுடன் இயங்க உள்நாட்டு விமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
விமானங்களில் தொடரும் கரோனா கட்டுப்பாடு! - கரோனா கட்டுப்பாடு
டெல்லி: உள்நாட்டு விமானங்களில் கரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை அடுத்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதிவரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Flight
முதற்கட்டமாக, 45 விழுக்காடு பயணிகளுடன் இயக்க உள்நாட்டு விமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு அடுத்து, 60 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், இந்தக் கட்டுப்பாடுகளை அடுத்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதிவரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.