தேசிய தலைநகர் டெல்லியில் விமான எரிபொருளின் விலை கிலோ லிட்டருக்கு 3,663 ரூபாய் உயர்ந்து 59,400.91 ரூபாயாக விற்கப்படுவதாக பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிப்ரவரி 16ஆம் தேதி, விமான எரிபொருள் 55,737 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
மார்ச் 1ஆம் தேதியான இன்று, மும்பையில் விமான எரிவாயுவின் விலை 57,519.65 ரூபாயாக உள்ளது. சென்னையில் 60,758.61 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 63,828.81 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதுகுறித்து விமான போக்குவரத்துத்துறை நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ஜிஎஸ்டியின் கீழ் எரிவாயுவை கொண்டு வர வேண்டும். எங்களது நீண்ட நாள் கோரிக்கையாக இது உள்ளது. விமான கட்டணத்தின் மொத்த விலையில் எரிவாயுவின் விலை மட்டும் 30 விழுக்காட்டிற்கு மேலாகும்” என்றார்.